மகாநதி சீரியலில் மாற்றப்பட்ட நடிகை... யார் தெரியுமா?

Mahanadhi serial
Mahanadhi serial
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on: 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் மகாநதி. இந்தத் தொடரிலிருந்து ஒரு நடிகை விலகியுள்ளதை அடுத்து புது நடிகை மாற்றப்பட்டிருக்கிறார்.

மகாநதி சீரியல் அக்கா தங்கைகளின் கதைகளை மையமாகக் கொண்டு நகர்ந்து வருகிறது. அப்பாவை இழந்த சகோதரிகள் இந்த சமுதாயத்தில் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அழகாக எடுத்துரைக்கும் விதமாக கதை அமைந்துள்ளது. குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர் 443 எபிசோடுகளை கடந்து செல்கிறது.

இந்த சீரியல் பலருக்கும் பிடித்தமான சீரியலாக உள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான சீரியல் என்பதால், அடிக்கடி டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் வரும். இந்தத் தொடர் கடந்த 2023ம் ஆண்டு ஆரம்பமானது. தற்போது காவேரி மற்றும் விஜய் எப்போது இணைவார்கள் என்பதற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தற்போது காவேரி போதும் போதும் என்று சொல்லும் வரை விஜய், காவேரியின் பிறந்தநாளை வெவ்வேறு விதமாக வித்தியாசமாக கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இருவரும் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பும் பொழுது அங்கே விஜய்யை பார்த்த வெண்ணிலாவுக்கு சில பழைய ஞாபகங்கள் வந்துவிட்டன. விஜயை பார்த்து பேசுவதற்கு வெண்ணிலா ஓடி வருவதற்குள் விஜய் காரை எடுத்துவிடுகிறார். அடுத்து வெண்ணிலா கதை தான் ஆரம்பமாகப் போகிறது என்பதற்கு ஏற்ப ராகினி கண்ணில் மாட்டப் போகிறார்.

இதையும் படியுங்கள்:
ஆளும் மூஞ்சியும் சரியே இல்ல – கவுண்டமணி குறித்து பாரதிராஜா சொன்ன வார்த்தைகள்!
Mahanadhi serial

அத்துடன் ராகினி, காவிரியிடம் சொன்னபடி அதிர்ச்சியாகும் அளவிற்கு ஒரு சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது. அதை முடிந்தவரை இன்று உனக்கு கொடுத்து விடுவேன் என்று சொல்லி இருந்தார். அந்த வகையில் காவிரியின் பிறந்தநாள் முடியும் தருவாயில் ராகினி, வெண்ணிலாவை கூட்டிட்டு வந்து விடுவார். இந்த இடத்தில்தான் ஒரு புது ட்விஸ்ட்.

வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து வந்த கண்மணி இந்த தொடரைவிட்டு வெளியேறியிக்கிறார். அவருக்கு பதிலாக இனி வெண்ணிலாவாக வைஷாலி கமிட்டாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆகையால், ராகினி வெண்ணிலாவை கூட்டி வருகிறார் அல்லவா? அங்குதான் புது நடிகை அறிமுகப்படுத்தப்படுகிறார். இதற்கு முன் வெண்ணிலா கேரக்டருக்கு வந்த கண்மணிக்கு தற்போது சன் டிவியில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் மகாநதி சீரியலில் இருந்து விலகுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com