வெளியானது மெட்டி ஒலி 2 அப்டேட்.. ரசிகர்கள் காத்திருக்கும் ஷாக்!

மெட்டி ஒலி
மெட்டி ஒலி

சீரியல்களுக்கு ஊர்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்களே சீரியல் பார்ப்பார்கள் என்று நம்மிடம் ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், கல்லூரி செல்லும் ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் சீரியல் பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் பலஆண்டு காலமாக பேசப்பட்ட சீரியலில் ஒன்று தான் மெட்டி ஒலி. இந்த சீரியலின் பாடல் கூட இன்றளவும் ரசிகர்களிடம் பிரபலமாகதான் உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய ஹிட் ஆன சீரியல் மெட்டி ஒலி. அந்த தொடர் ஒளிபரப்பை முடித்து கிட்ட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. ரீடெலிகாஸ்ட் ஆன போது கூட ரசிகர்கள் தொடரை விரும்பி பார்த்தார்கள்.

இந்நிலையில் மெட்டி ஒலி 2ம் சீசன் தொடங்குகிறது எனவும் அதற்காக பணிகள் நடந்து வருகிறது என கடந்த வருடமே செய்தி பரவியது. ஆனால் தற்போது வரை அதிகாரபூர்வ தகவல் எதுவும் வராமல் உள்ளது.

இதையும் படியுங்கள்:
ரஜினியை வம்புக்கு இழுத்த சுப்புனி என்ன செய்கிறார் தெரியுமா?
மெட்டி ஒலி

இந்நிலையில் தற்போது ஒரு புது அப்டேட் வந்துள்ளது. அதன்படி இந்த மெட்டி ஒலி 2 சீரியலை திருமுருகன் இயக்கவில்லை என்றும், விக்ரமாதித்தன் என்பவர் தான் இயக்குகிறார் எனவும் கூறப்படுகிறது. நாதஸ்வரம் உள்ளிட்ட பிரபலமான சீரியல்களை இயக்கிய திருமுருகனுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர் இந்த சீரியலை இயக்கவில்லை என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com