ரிலீசாகாத படங்களுக்காக கோடி கணக்கில் முதலீடு செய்த நெட்பிளிக்ஸ்!

நெட்பிளிக்ஸ்
நெட்பிளிக்ஸ்
Published on

ரிலீஸாவதற்கு வரிசைகட்டி நிற்கும் படங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது.

கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு ஓடிடி நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. படம் ரிலீஸான ஓரிரு மாதங்களில் ஒடிடி தளங்களில் தியேட்டரில் பார்க்கும் பிரிண்டில் வெளியாகிவிடுகிறது. இதனால் மக்கள் அதிகம் ஓடிடியில் பார்க்க விருப்பப்படுகிறார்கள்.

தற்போது ஸ்மார்ட் டிவி வைத்திருப்பவர்களே பெரும்பாலானோர்கள். இவர்கள் அனைவரும் ஒடிடி தளங்களில் படம் பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில்,

இந்தியாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட பெரும் தொகையை தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் முதலீடு செய்து வருகிறது.

அமேசான் ப்ரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் என இந்த 3 நிறுவனங்களில் தான் அதிக பெரிய படங்கள் வெளியாகிறது. அடுத்து வரும் படங்கள் ரீலீசாகி ஒடுகிறதா என்றே கணக்கிடாமல் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அனைத்து படத்தையும் விலைக்கு வாங்கியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2, மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா நடித்து வரும் விடாமுயற்சி, பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான், சிவகார்த்திகேயனின் எஸ்கே 21, விஜய்சேதுபதியின் மகாராஜா, கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட பல படங்களை வாங்கி இருக்கிறது நெட்பிளிக்ஸ்.

இந்தப் படங்களுக்கும் பெரிய தொகையையும் கொடுத்து புக் செய்துள்ள நெட்பிளிக்ஸ் 350 முதல் 400 கோடி ரூபாயை தமிழ் சினிமாவுக்கு மட்டும் ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com