சிறு பட்ஜெட் படங்களைக் காப்பாற்றுமா ஓடிடி பிளஸ்?

Small Budjet films
OTT Plus
Published on

தமிழ் சினிமாவில் வாரந்தோறும் குறைந்தபட்சம் 5 படங்களாவது வெளி வருகிறது. இதில் பெரிய நடிகர்களின் படங்களுக்குத் தான் அதிக அளவில் தியேட்டர்கள் கிடைக்கிறது. சிறு பட்ஜெட் படங்களுக்குப் போதிய அளவில் தியேட்டர்கள் கிடைப்பதில்லை. அதே சமயம் முன்னணி ஓடிடி தளங்களும் சிறு பட்ஜெட் படங்களை ஆதரிக்காமல் ஒதுக்குகின்றன. இதனால், சிறு பட்ஜெட்களில் எடுக்கப்படும் தரமான திரைப்படங்கள் மக்களைச் சென்றடைய முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், சிறு பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனைத் தடுக்கும் விதமாக இப்போது சிறு பட்ஜெட் படங்களுக்காக மட்டுமே தனியாக 'ஓடிடி பிளஸ்' என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தான் ஓடிடி தளங்களின் வருகை அதிகரித்துள்ளது. தியேட்டர்களில் வெளியான படங்கள், அதனைத் தொடர்ந்து ஓடிடி தளத்திலும் வெளியாகி இலாபத்தைப் பெறுகிகின்றன. இந்நிலையில், சில சிறு பட்ஜெட் படங்கள் நேரடி ஓடிடி படங்களாகவும் வெளிவருகிகின்றன. இதற்கெல்லாம் முக்கிய காரணம், தியேட்டர்கள் கிடைக்காமல் போவது தான். இருப்பினும் ஒருசில சிறு பட்ஜெட் படங்கள் பல தடைகளைத் தாண்டி தியேட்டர்களில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அவ்வகையில் கடந்த வருடம் வெளியான லவ் டுடே, டாடா மற்றும் குட் நைட் போன்ற சிறு பட்ஜெட் படங்கள் மக்களிடையே வரவேற்பையும் பெற்று, நல்ல வசூலையும் பெற்று வெற்றியடைந்தன.

ஒருசில படங்கள் தான் தியேட்டர் வரை வருகின்றன. பல சிறு பட்ஜெட் படங்கள் தியேட்டர் வரை வருவதற்கே பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வாக சிறு பட்ஜெட் படங்கள் மக்களைச் சேர வேண்டும் என்பதற்காகவும், நஷ்டம் அடையாமல் இருப்பதற்காகவும் 'ஓடிடி பிளஸ்' என்ற ஓடிடி தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓடிடி தளத்தின் இயக்குநர்களாக எம்.ஆர். சீனிவாசன், கேபிள் சங்கர் மற்றும் சுதாகர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஓடிடி பிளஸ் தளத்தின் தொடக்க விழா வெகு விமரிசையாக சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி உள்பட பல இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்:
‘கேம் சேஞ்சர்’ ரிலீசாவதற்கு முன்பே ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய அமேசான்!
Small Budjet films

ஓடிடி பிளஸ் தளம் சினிமா உலகில் புதியவர்களுக்கான வாய்ப்பை அளிக்கும். பல நல்ல திரைப்படங்களை ஆதரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தளத்தின் மூலம், சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு ஒரு விடிவு காலம் பிறந்துள்ளது எனலாம். இந்தத் தளத்தில் குறைந்தபட்சம் ரூ.29 முதல் ரூ.299 வரையிலான கட்டணத்தில் புதிய படைப்புகளை கண்டு ரசிக்கலாம்.

ஓடிடி தளங்களின் வருகையால் பொதுமக்கள் பலரும் வீட்டில் இருந்தே புதிய படங்களை கண்டு ரசிக்கின்றனர். இது அவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காகவும் அமைகிறது. இதனால் ஓடிடி பிளஸ் தளமும் வெகு விரைவிலேயே மக்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓடிடி பிளஸ் தளத்தின் அறிமுகத்தால், இனி சிறு பட்ஜெட் படங்கள் நிச்சயமாக காப்பாற்றப்படும் என்பது உறுதியாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com