

1. பராசக்தி - ZEE5
சிவகார்த்திகேயன், ரவி மோகன் , அதர்வா முரளி, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் , சுதா கொங்குரா இயக்கத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் பராசக்தி. தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மையக்கருவை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது . பொங்கல் வெளியிடாக திரைக்கு வந்து இந்த திரைப்படம் , பிப்ரவரி 07 ஆம் தேதி ZEE5 ஓடிடி தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.
2.தி ராஜா சாப் – ஜியோ ஹாட்ஸ்டார்
பிரபாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த திகில் , அமானுஷ்யம் , நகைச்சுவை , காதல் கலந்த திரைப்படம் இது. ஒரு பேய் மாளிகைக்கு செல்லும் பாட்டி , பேரன் , பேரனின் தோழிகள் ஆகியோர் சந்திக்கும் திகில் கலந்த நகைச்சுவை நிகழ்வுகள் தான் படத்தின் திரைக்கதை. இந்த திரைப்படத்தில் பிரபாஸ் உடன் சஞ்சய் தத் , செரினா வஹாப் , பூமன் இராணி , மாளவிகா மோகனன், நிதி அகர்வால் , அம்மு அபிராமி , விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் ₹160 கோடிக்கு வாங்கி இருந்தது.
பிப்ரவரி 06 ஆம் தேதி முதல் தமிழ் ,தெலுங்கு , ஹிந்தி ,கன்னடம் , மலையாளம் ஆகிய மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் கண்டுகளிக்கலாம்.
3.நீலகண்டா – சன் NXT
மாஸ்டர் மகேந்திரனின் நடித்த தெலுங்கு மொழி திரைப்படம் இது. சிறுவயதில் செய்த தவறுக்காக கிராமத்தில் வசிக்கும் நீலகண்டாவிற்கு , கிராமத்தை விட்டு 15 ஆண்டுகள் வெளியேறவே கூடாது என்ற விசித்திரமான தண்டனை வழங்கப்படுகிறது. அதன் பின்னர் நடைபெறும் நடைபெறும் கதை தான் திரைப்படம். இந்த திரைப்படத்தில் மகேந்திரனுடன் ராம்கி , யஷ்னா , சினேகா உல்லாள் ஆகியோரும் நடித்துள்ளனர். நீலகண்டா திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிப்ரவரி 6, 2026 முதல் சன் NXT OTT தளத்தில் பார்க்கலாம்.
மனதை இதமாக்கும் நிவின் பாலியின் காதல் திரைப்படங்கள்:
1. பிரேமம் - ஜியோ ஹாட்ஸ்டார் ,அமேசான் பிரைம்
நிவின் பாலி , சாய் பல்லவி , மடோனா செபாஸ்டியன் , அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்த காதல் நகைச்சுவை திரைப்படம் பிரேமம். படத்தின் கதாநாயகனான ஜார்ஜ் தனது பள்ளிப்பருவத்தில் இருந்து இருமுறை காதலில் தோற்பதும், இறுதியில் மீண்டும் காதல்வயப்படுவதும் தான் திரைக்கதை. படத்தில் மேரி மீதான ஜார்ஜின் நகைச்சுவை காதலும் , கவிதை போன்று மலர் டீச்சர் மீதான காதலும் , பக்குவம் நிறைந்த பின்னர் வரும் செலின் மீதான காதலும் நிச்சயம் உங்களை ரசிக்க வைக்கும். ஜியோ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் ஆகிய தளங்களில் மலையாள மொழியில் காணக் கிடைக்கிறது.
2. ஓம் சாந்தி ஓஷானா - ஜியோ ஹாட்ஸ்டார்
நிவின் பாலி , நஸ்ரியா , வினித் சீனிவாசன் ஆகியோர் நடித்த நகைச்சுவை நிறைந்த காதல் திரைப்படம் தான் ஓ சாந்தி ஓஷானா . டாக்டராக பணிபுரியும் விளையாட்டுப் பெண்ணான பூஜாவும் அதே ஊரை சேர்ந்த கிரிக்கும் இடையில் நடைபெறும் பல்வேறு காதல்களும் அதற்குள் நடைபெறும் சிக்கல்களும் , இறுதியில் அந்த கதை எவ்வாறு முடிந்தது என்ற ஆர்வத்தை தூண்டும் திரைப்படம். 2014 ஆம் ஆண்டு வெளிவந்து பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் அது. இந்த திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் , அமேசான் பிரைம் , மனோரமா மேக்ஸ் ஆகிய ஒடிடி தளங்களில் காணக் கிடைக்கிறது.