பிக்பாஸ் 7 டைட்டிலை தட்டி தூக்கிய இளம் விவசாயி.. வைரலாகும் வீடியோ!

PallaviPrasanth
PallaviPrasanth
Published on

பிக்பாஸ் 7 டைட்டிலை தட்டி தூக்கிய நபர்.. கைதூக்கிய கடைசி தருணம்.. வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சி நாடு முழுவதும் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. தமிழில் இதுவரை 6 சீசன் முடிந்த நிலையில், 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி 75 நாட்களை கடந்து ஓடி கொண்டிருக்கிறது.  

இன்னும் சில தினங்களில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி பைனலுக்கு வர இருக்கிறது. தமிழை போலவே தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சென்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் பிக்பாஸை போல் தெலுங்கு பிக்பாஸில் திரைப்பிரபலங்கள் மட்டுமில்லாமல் யூடியூப் பிரபலங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளராக சகிலா கூட கலந்து இருந்தார். 

இந்த நிலையில் நேற்று தெலுங்கு பிக்பாஸ் 7 நிகழ்ச்சி பைனல் நடந்து முடிந்து இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் பல்லவி பிரசாந்த், அமர்தீப் ஆகிய 2 போட்டியாளர்களில் யார் கோப்பையை வெல்வார்கள்? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இறுதியில், பல்லவி பிரசாத் என்ற யூடியூப் பிரபலமான ஒருவர், தற்போது பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றுள்ளார்.

விவசாயம் தொடர்பான யூ டியூப் சேனலை நடத்தி வரும் பல்லவி பிரசாத், தனக்கான ஃபாலோவர்ஸை அதிகமாகக் கொண்டுள்ளார். தெலங்கானாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பல்லவி பிரசாத், தன்னுடைய யூடியூப் சேனலில் விவசாயம் தொடர்பான வேலைகளைப் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வந்தார். 

தன்னை ஒரு விவசாயின் குழந்தை என்று கூறிக் கொள்ளும் பல்லவி பிரசாத், தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்று பிரபலமாகியுள்ளார். போட்டியின் தொடக்கத்தில் இருந்து வரவேற்பை பெற்ற இவர், கடைசியாக டைட்டில் வின்னராகி ரூ.35 லட்சத்தை பெற்றுள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் திரைப் பிரபலம் இல்லாத ஒருவர், டைட்டில் வின்னராகி ரூ.35 லட்சம் வென்றிருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

வெற்றி ஒரு பக்கம் இருக்க பல்லவி பிரசாத் ரசிகர்கள், அமர்தீப் மற்றும் அவரது குடும்பத்தார் சென்ற காரை அடித்து நொறுக்கினார்கள். ஒரு விளையாட்டால் இப்படி உயிருக்கு ஆபத்தாகும் அளவிற்கு பிரச்சனை கிளம்பியுள்ளது. பலரும் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com