விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் அரசிக்கு கல்யாணம் ஏற்பாடு செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள் பாண்டியன் குடும்பத்தினர். அரசி, பாண்டியனின் எதிரி வீடான கோமதி அண்ணன் மகனான குமரவேலுவை காதலித்து வருகிறார். இதற்கு துணையாக பழனிவேலுவின் மனைவி பல செயல்களை செய்கிறார். ஒரு முறை படம் பார்க்க குமரவேலுவுடன் சேர்ந்து அரசி தியேட்டர் செல்கிறார். படம் முடிந்ததும் குமரவேலு அரசி இருவரும் போட்டோ எடுத்துக்கொண்டு ரசித்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது எதர்ச்சியாக சரவணன் அங்கு வருகிறார். வந்ததும் நேராக குமரவேலுவை அடிக்கப்போகிறார் என் தங்கச்சிய என்ன சொல்லி கூட்டிட்டு வந்தன்னு. அப்போது குமரவேலு, நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்று கூறிவிடுகிறார்.
சரவணன் அங்கிருந்து அரசியை வீட்டுக்கு அழைத்து வருகிறார். அப்போது வரும் வழியில் செந்திலுக்கு போன் செய்து அப்பாவை உடனடியாக வீட்டிற்கு அழைத்து வா என்று சரவணன் சொன்னார்.
பாண்டியன் வீட்டில் அனைவரும் வந்து கூடிவிட்டனர். அப்போது அரசியை அழைத்து வந்த சரவணன், அரசி ஒருவரை காதலிக்கிறார், உங்கள் அனைவரிடமும் பொய் சொல்லிவிட்டு படத்துக்கு போய்விட்டு வந்திருக்கிறாள் என்று கூறுகிறார்.
மேலும் அவள் காதலிப்பது வேறு யாரும் இல்லை குமரவேல் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் மீண்டும் பேரதிர்ச்சி ஆக இருக்கிறது. அனைவரும் அரசியை பயங்கரமாக திட்டுகிறார்கள். பாண்டியன் மட்டும் எதுவும் பேசமுடியாமல் அதிர்ச்சியில் மயங்கி விழுகிறார்.
பாண்டியன் வீட்டைவிட்டு காணாமல் போக, மகன்கள் தேடி கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்கள். மகன்கள் கோமதி அண்ணன் வீட்டுக்கு சென்று சண்டையெல்லாம் போட்டார்கள். இப்போதுதான் நிலைமை பழைய மாதிரி திரும்புகிறது.
அப்பொழுது சொந்தக்காரர் அரசிக்கு மாப்பிள்ளை பார்த்த விஷயமும் கல்யாணம் பண்ணால் சொந்தம் விட்டுப் போகாது என்று கூறினார். அந்த சம்பந்தத்தை அரசிக்கு பார்த்து முடித்து வைத்து விடுவோமா ? நீ என்ன நினைக்கிறாய் என்று கோமதியிடம் பாண்டியன் கேட்கிறார். கோமதியும் சம்மதிக்கிறார். பின் அண்ணன் வீட்டுக்கு சென்று, என் மகள் குமாரு விஷயத்தில் தலையிட மாட்டார், அதே மாதிரி உங்க பையனும் என் மகளை தொந்தரவு பண்ண கூடாது என்று கேட்கிறார்.
அதேபோல், அவரும் எந்த பிரச்சனையும் வராது என்று சத்தியம் செய்துவிடுகிறார். ஆகையால், கல்யாண வேலையை பாண்டியன் குடும்பம் ஆரம்பிக்கிறது. ஆனால், இதைத்தடுத்து குமரவேலுவை கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று, சுகன்யா மற்றும் சக்திவேல் கூட்டணி போட்டு சிக்கல்களை உண்டாக்கப் போகிறார்கள்.