விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் அரசிக்கு கல்யாண ஏற்பாடுகள் ஆரம்பமான நிலையில், சுகன்யா அவரை தூண்டிவிடுகிறார்.
அரசி, பாண்டியனின் எதிரி வீடான கோமதி அண்ணன் மகனான குமரவேலுவை காதலித்தார். ஒரு முறை படம் பார்க்க குமரவேலுவுடன் சேர்ந்து அரசி தியேட்டர் செல்கிறார். அப்போது சரவணனிடம் வசமாக அரசி மாட்டிக்கொண்டார். அப்போது குமரவேலு, நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்று கூறிவிடுகிறார்.
இது பாண்டியன் வீட்டுக்கு தெரிந்து பெரிய பிரலையமே வெடித்தது. அனைவரும் அரசியை பயங்கரமாக திட்டுகிறார்கள். பாண்டியன் மட்டும் எதுவும் பேசமுடியாமல் அதிர்ச்சியில் மயங்கி விழுகிறார்.
பாண்டியன் வீட்டைவிட்டு காணாமல் போக, மகன்கள் தேடி கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்கள். மகன்கள் கோமதி அண்ணன் வீட்டுக்கு சென்று சண்டையெல்லாம் போட்டார்கள். இப்போதுதான் நிலைமை பழைய மாதிரி திரும்புகிறது.
பின் அரசிக்கு மாப்பிள்ளைப் பார்த்து கல்யாண வேலை நடக்கிறது. இந்த கல்யாணத்திற்கு அரசி ஒப்புக்கொண்டார். பாண்டியன் கல்யாணத்திற்கு பிறகு அரசி படித்துக்கொள்ளட்டும் என்று கூறிவிடுகிறார்.
அரசி தனியாக ஃபீல் செய்கிறார். அப்போது சுகன்யா வந்து அரசி மனசை மாற்றும் விதமாக யாரோ ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வைப்பதற்கு உனக்கு பிடிச்ச மாமா பையனையே கல்யாணம் பண்ணி வச்சா நீயும் சந்தோசமா தானே இருப்ப, அதை பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை.
உன்னைப் பற்றி யோசிக்காதோங்கள பற்றி நீ என் யோசிக்கனும், பெரியவங்க ஆயிரம் சொன்னாலும் அதை நீ பெரிசாக எடுத்துக் கொள்ளாதே. எப்படியாவது குமரவேலுடன் உனக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது மீனா கேட்டுக் கொண்டார்.
உடனே மீனா, அவகிட்ட என்ன பேசிட்டு இருந்தீங்கனு கேட்டேன்… ஏற்கனவே வீட்ல அவ்வளவு பிரச்சனை போய்ட்டு இருக்கு. நீங்க வேற பிரச்சன பண்ண பாக்குறீங்களா? என்று கேட்கிறார். அவளுடைய நல்லது கெட்டது எல்லாத்தையும் அவங்களுடைய அப்பா அம்மா முடிவு பண்ணட்டும். நீங்கள் தேவையில்லாமல் பேசி அவளுடைய விஷயத்தில் தலையிட வேண்டாம். இத்தனை நாளாக நீங்கள் இவளிடம் பேசியது எல்லாமே குமரவேலு பற்றி தானா? என்று கோபமாக பேசுகிறார்.
மறுபக்கம் குமரவேலுவிடம் சக்திவேல் ஒரு அட்வைஸ் கொடுக்கிறார். எப்படி நம்ம வீட்டுப் பொண்ண கூட்டிட்டுபோய் அவன் வீட்டு பையன் திருட்டுக் கல்யாணம் பண்ணானோ, அதேபோல் நீயும் பண்ணு என்று கூறுகிறார்.
சுகன்யா பாண்டியன் வீட்டில் நடந்ததையெல்லாம் சக்திவேல் வீட்டில் வந்து சொல்லும்போது ராஜி அம்மா அவரை கண்டிக்கிறார்.