விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அரசியின் திருமணம் பல தடங்களுக்கு பிறகு நடந்து வருகிறது.
குமார் அரசியை மிரட்டி வெளியே வர சொன்னார். பயந்துப்போன அரசி வெளியே வந்தாள், அண்ணன்கள் அங்கு இருப்பதைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டார். குமாரும் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டார். அரசி குமாரின் செயல் குறித்து பாண்டியனிடம் சொல்லலாம் என்று ரொம்பவே முயற்சி செய்கிறார். ஆனால், முடியாமல் போனது. ஆகையால் இப்போது அண்ணன்களிடமாவது சொல்லலாம் என்று முயற்சி செய்கிறார். ஆனால் அதற்குள் கோமதி அங்கு வருவதால் முடியாமல் போய்விடுகிறது.
இதனையடுத்து நேற்று குமார் அரசிக்கு போன் செய்து இந்த திருமணம் நடக்காது. உன் அப்பா தேவையில்லாமல் கடன் வாங்கி இதெல்லாம் செய்தார். நான் சொல்வதைக் கேட்டால் உன்னுடைய மானம் போகாது என்றெல்லாம் பேசி மிரட்டி இருந்தார்.
மறுபக்கம் கோமதி மருமகள்களை நகையெல்லாம் போட சொல்லி சொன்னார். ஆனால், தங்கமயில் நகைகள் கவரிங் என்பதால், கருத்து போயிற்று. மீனா- ராஜி இருவருமே உங்களுடைய நகைப் பற்றி வெளியே தெரியாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் பயப்படாதீர்கள் என்று தங்கமயிலுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்.
இதனையடுத்து மீனா- செந்தில் இருவருமே மேட்சிங் உடைய போட்டிருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறார். உடனே மீனா, கதிரும் உனக்கு மேட்சிங்கா ட்ரெஸ் போட்டு இருக்கிறாரா? என்று கேட்டவுடன் ராஜி கதிரை திட்டிக் கொண்டிருக்கிறார்.
இதையெல்லாம் வெளியே நின்று கேட்ட கதிர், ராஜிக்காக அந்த சட்டையை போட்டு வந்து நிற்கிறார். உடனே ராஜியின் கோபம் சந்தோஷமாக மாறியது. குமார் ஏதாவது பிரச்சனை செய்வாரா? என்று ஒரு அரசி பயந்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்போது குமார், சுகன்யாவுக்கு போன் செய்து கொண்டே இருக்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் சுகன்யாவும் அமைதியாக இருக்கிறார்.
இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.