பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ்Intel

தனத்திற்கு பெண் குழந்தை.. குஷியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. டாப் ட்ரெண்டிங்கில் ப்ரோமோ!

Published on

பிரபல விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். 4 சகோதரர்களுக்கும் திருமணமாகி விறுவிறுப்பாக கதைகளம் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென 3 மருமகள்களும் கர்ப்பம் தரித்தனர்.

பாஸ்டிவ்வாக கதை நகர்ந்து கொண்டிருந்த சூழலில் திடீரென பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு ஜீவாவும், கண்ணனும் பிரிந்து சென்றனர். பிரிந்து சென்ற கண்ணன் வறுமையில் சிக்கியதால் போராடி மூர்த்தியின் வீட்டிற்குள் வந்தார். மீண்டும் இந்த குடும்பம் ஒன்று சேருமா என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் வரிசையாக ஒவ்வொரு மருமகள்களுக்கும் குழந்தை பிறக்கிறது

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முல்லைக்கு பெண் குழந்தை பிறந்தது, கடந்த வாரம் ஐஸ்வர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தனத்திற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் அடடே சூப்பர் என கமெண்டுகளை தட்டி வருகின்றனர்.

இந்த ப்ரோமோ யூடியூப்பில் 3.4 மில்லியன் பார்வைகளை கடந்து டாப் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது. இனி தனம் தனக்குண்டான மார்பக புற்றுநோய் குறித்து வீட்டில் எப்படி தெரிவிப்பார் என கதை நகறும். இனி வரும் எபிசோட்களில் தனத்திற்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாக தெரிகிறது. இதை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com