ஜீவாவை அடிக்க சொன்ன மாமனார்.. ஷாக்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ்

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தக் குடும்பத்தின் நான்கு சகோதரர்களுக்கும் திருமணமாகி விறுவிறுப்பாக கதைக்களம் நகர்ந்து கொண்டிருந்த நிலையில், அந்தக் குடும்பத்தின் மூன்று மருமகள்களும் குழந்தைப் பெற்று உள்ளனர்.

அந்தக் குடும்பத்தின் மூத்த மருமகள் தனத்துக்கு திடீரென மார்பகப் புற்றுநோய் வந்தது. இந்த விஷயம் ஐஸ்வர்யாவால் அனைவருக்கும் தெரிய வர, ஒருவழியாக அனைவரும் அழுது ஓய்ந்து தற்போது ஆறுதல் சொல்லும் நிலைக்கு தெம்பாகியுள்ளனர். கடந்த வாரம் முழுவதும் பிரஸ்ட் கேன்சர் விஷயம் வீட்டுக்கு தெரிந்தால் என்னவாகும் என்று கதை சென்று கொண்டிருந்த நிலையில் ஒருவழியாக தெரிந்துவிட்டது.

இது ஒரு புறம் இருக்க மாமனாரின் காசெல்லாம் கரைகிறதே, மாமனாரை பிரசாந்த் ஏமாற்றுகிறாரே என்ற வருத்தத்தில் ஜீவா இருந்துள்ளார். இந்த நிலையில் ஜீவா பிரசாந்தை நேரடியாக பார்த்து மாமனாரை ஏமாற்ற வேண்டாம் என கண்டிக்கிறார். அதற்கு பிரசாந்த் அப்படி தான் செய்வேன் என அடிக்க பாய்கிறார். கேட்டதற்கு உன் மாமனார் தான் அடிக்க சொல்கிறார் என கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ஜீவா நல்லது நினைத்த எனக்கா இந்த நிலை என மனம் நொந்தார்.

இதனை கண்டு ஆத்திரமடைந்த கதிர், நேரடியாக மீனாவின் அப்பா வீட்டிற்கு சென்று என் அண்ணனையா அடிக்க ஆள் அனுப்புறீங்க, உங்களால் எங்க அண்ணனுக்கு எதாவது ஆனால், கொலை செய்து ஜெயிலுக்கு போக கூட ரெடி என கூறி எச்சரிக்கை விடுத்து சென்றார். இந்த ப்ரோமோ காட்சிகள் தற்போது வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. உண்மையிலேயே அவர் அடிக்க சொன்னாரா இல்ல பிரசாந்த் பொய் சொன்னாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த வீடியோ தற்போது டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com