OTT ரிலீஸ் : பாண்டிராஜின் 'பரிமளா & கோ', சன்னி தியோலின் 'இக்கா' உட்பட 3 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்!

'ஜீ 5' தளத்தில் வெளியாகும் ஜெயராம் - ஊர்வசியின் டார்க் காமெடி த்ரில்லர்; சோனி லைவ் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் தளங்களின் அறிவிப்பு விவரம்.
பரிமளா & கோ
பரிமளா & கோ
Updated on

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், ஜெயராம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த 'பரிமளா & கோ' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாண்டியராஜ் இயக்கத்தில் லைகா ப்ரொடக்ஷன் சார்பில் உருவான 'பரிமளா அண்ட் கோ' வில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயராம் மற்றும் ஊர்வசி இணைந்து நடித்துள்ளது சிறப்பு. இந்தப் படம் ஒரு நடுத்தர குடும்பத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட டார்க் காமெடி மற்றும் த்ரில்லர் வகைப் படமாகும்.

படத்தில் ஜெயராம் மற்றும் ஊர்வசியின் அனுபவம் மிகுந்த நடிப்பு, சில இடங்களில் வரும் டைமிங் காமெடி மற்றும் பொருத்தமான நடிகர்களின் தேர்வு ஆகியவை படத்தின் பலமாக இருந்தாலும் அவை வெகுவாக ரசிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

மனைவி, மகள்களுடன் வசிக்கும் குடும்பஸ்தர் இளைய மகளைக் காதலிப்பதை எதிர்க்கும் மூத்த மகள் மீது ஆசிட் ஊற்றிவிடுவதாக மிரட்டும் லோக்கல் ரவுடியைக் கொலை செய்து விடுகிறார். அதைத் தொடர்ந்து வரும் விசாரணை வளையங்கள் அதை லாவகமாக எதிர்கொள்ளும் குடும்பம் என்கிற நல்ல கதைக் கருவை மையமாகக் கொண்டிருந்தாலும், திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாதது மற்றும் ஏற்கனவே எதிர்பார்த்தது போன்ற காட்சிகள் படத்தை சுவாரஸ்த்தை குறைத்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

நல்ல குடும்பக்கதைகளுக்கு பிரபலமான இயக்குனர் பாண்டிராஜ் இந்தப் படத்தில் த்ரில்லரை இணைத்ததால் சற்றே சறுக்கி விட்டாரோ என பெரும்பாலான விமர்சனங்கள் கூறியது. வழக்கமான காட்சிகள் திரைக்கதையின் சுவாரஸ்யமின்மை மற்றும் இரண்டாம் பாதியில் காணப்படும் இழுவையான காட்சிகள் ஆகியவை பார்வையாளர்களுக்கு சலிப்பைத் தருவதாகவும் விமர்சனங்கள் தெரிவித்தன.

சிக்கனமான குடும்ப தலைவராக ஜெயராமும், அப்பாவியான மனைவியாக ஊர்வசியும் தங்கள் கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்தது படத்தின் பலமாகவும் மிஷ்கின், யோகி பாபு மற்றும் சாண்டி ஆகியோரின் பங்களிப்பு இருந்தாலும், சில இடங்களில் நகைச்சுவை காட்சிகள் எடுபடவில்லை எனவும் சவ்வு போல் இழுவையைத் தந்ததாகவும் சொல்கிறது.ரசிகர்களின் கருத்துகள்

ஜெயராம், ஊர்வசியின் நகைச்சுவை காட்சிகள் மற்றும் ஜார்ஜ் சி. வில்லியம்சின் ஒளிப்பதிவும், இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளதாக கூறப்படும் அதே வேளையில் படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனாலும் ரசிகர்கள் இடையே ஒரு முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிய ஒரு சுமாரான திரைப்படமாகவே 'பரிமளா அண்ட் கோ' கருதப்படுகிறது.

திரையரங்குகளில் வெளியாகி படம் தற்போது டிஜிட்டல் தளத்தில் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது ஜெயராம் ஊர்வசி கூட்டணியில் உருவான இந்தப் படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை என சொல்லப்படுகிறது .

இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது. எனினும் அந்த எதிர்பார்ப்பு முழுமையாக நிறைவேறவில்லை என்றாலும் மேலும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மிகவும் யோகி பாபு அனந்திகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

OTT
OTT

இந்த நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூலை 10ஆம் தேதி ஜீ 5 (ZEE5 )ஓ டி டி தளத்தில் பரிமளா அண்ட் கோ திரைப்படம் வெளியாக உள்ளது . திரையரங்குகளில் படத்தை பார்க்க தவறவிட்டவர்கள் தற்போது ஓடிடியில் இந்த பிளாக் காமெடி திரைப்படத்தை குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம்.

பரிமளா & கோ மட்டுமல்ல..ஜூலை 10 அன்று ரசிகர்களுக்கு விருந்து தரும் விதமாக பல திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க மலையாளப் படமாக பல்டி (Balti) ஜூலை 10 முதல் சோனி லைவ் (Sony LIV) தளத்தில் வெளியாகிறது. இது கேரளா - தமிழ்நாடு எல்லையோரக் கிராமத்தில் கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவான ஒரு அதிரடித் திரைப்படமாகும். ஷேன் நிகாம் மற்றும் சாந்தனு பாக்யராஜ் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்டகாலத்துக்குப்பின் மலையாளத் திரையுலகில் சாந்தனுவின் மறுபிரவேசமாக இப்படம் அமைகிறது. இது ஒரு ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆக்‌ஷன் திரைப்படமாக இளைஞர்களைக் கவரும் விதமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இக்கா (Ikka) சன்னி தியோல் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்திப்படமான இது ஜூலை 10 முதல் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) தளத்தில் வெளியாகிறது. இது சட்டம் மற்றும் திரில்லர் வகை திரைப்படமாகும். சித்தார்த் பி. மல்ஹோத்ரா இயக்கியுள்ள இப்படத்தில், சன்னி தியோலுடன் அக்ஷய் கண்ணாவும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நேர்மையான மற்றும் புகழ்பெற்ற வழக்கறிஞராக சன்னி தியோல் , கொலைக் குற்றம் சாட்டப்பட்டவராக அக்ஷய் கண்ணா நடித்துள்ளனர்.

தொழில் வாழ்க்கையை முன்பு அழித்த ஒரு நபரை வழக்கில் இருந்து காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தன் குடும்பத்தையும் கொள்கைகளையும் காப்பாற்ற, வழக்கறிஞர் சட்டத்தின் எல்லையைத் தாண்டி எப்படி போராடுகிறார் என்பதே படத்தின் மையக்கதை.

கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு இந்த இரண்டு நடிகர்களும் மீண்டும் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கடைசியாக 1997-ல் ஜே.பி. தத்தாவின் ' பார்டர் ' என்ற போர் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் .மேலும், 1993-ல் வெளியான 'தாமினி' படத்திற்குப் பிறகு சன்னி தியோல் மீண்டும் ஒரு வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார் எனப்படுகிறது. வித்யாசமான வழக்கு கதையில் பரபரப்பான காட்சிகளை எதிர்பார்க்கலாம்.

நல்ல திரைப்படங்களை திரையரங்குகளில் சென்று பார்ப்பதே நல்லது எனினும் இது போன்ற நடுத்தர விமர்சனங்கள் பெற்ற படங்களின் ஓடிடி தள வெளியீட்டை ரசிகர்கள் குடும்பத்துடன் செலவின்றி பார்க்க மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன்..!
பரிமளா & கோ
logo
Kalki Online
kalkionline.com