கோர்ட்டில் சாட்சி சொன்ன ராதிகா... ஈஸ்வரி வெளியே வருவாரா?

Baakiyalakshmi
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஈஸ்வரியிடம் கோர்ட்டில் விசாரணை நடைபெறுகிறது.

1000 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து, தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ராதிகா கரு கலைந்த பிறகு பல ட்விஸ்ட்களை கொண்டிருக்கிறது.

ராதிகாவின் கரு கலைந்ததற்கு ஈஸ்வரிதான் காரணம் என ராதிகாவும், கமலாவும் கோபியிடம் போட்டுக்கொடுக்க, தனது தாயை தவறாக நினைத்துக் கொள்கிறார் கோபி. இதனால் கொந்தளித்த கோபி, ஈஸ்வரிதான் ராதிகாவை கீழே தள்ளிவிட்டார் என நினைத்து தாயிடம் சண்டைக்குச் செல்கிறார். மேலும், தாயை வீட்டை விட்டு வெளியேற்றியதால் ஈஸ்வரி நிலைகுலைந்துள்ளார். வீட்டில் தினமும் அழுது கொண்டிருந்த ஈஸ்வரியை சமாதானம் செய்து, பாக்கியா வெளியூருக்கு காரில் அழைத்துச் சென்று மகிழ்ச்சி படுத்துகிறார்.

மேலும், ஈஸ்வரியின் பழைய சிநேகிதியை கண்முன் கொண்டு வந்து சர்ப்ரைஸ் செய்கிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த ஈஸ்வரி, மலரும் நினைவுகளாக தோழியிடம் பலவற்றை பகிர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, கஷ்டத்தின் எல்லைக்குச் சென்ற கோபி, மீண்டும் போதையை கையிலெடுக்கிறார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வர, ராதிகா கொந்தளித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
‘இது தைரியம் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது’ பார்த்திபன் நச்!
Baakiyalakshmi

போதையில் கமலாவை திட்டிய கோபியால் பிரச்சனை முட்டுகிறது. இதனால் பழி வாங்க வேண்டும் என நினைத்த கமலா, ஈஸ்வரி மீது போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து பாக்கியலட்சுமி இல்லத்திற்கு வந்த போலீசார், ஈஸ்வரியை குண்டுகட்டாக தூக்கி சென்றனர். இதனால் கதறி அழுத பாக்கியா குடும்பத்தினர், எவ்வளவு கூறியும் போலீசார் கேட்கவில்லை.

தொடர்ந்து இன்றைய எபிசோட்டில் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்படும் ஈஸ்வரியிடம் வக்கீல் விசாரணை நடத்துகிறார். தான் கொலை செய்யவில்லை என ஈஸ்வரி எவ்வளவோ கூற அந்த வக்கீல் விடுவதாக இல்லை. மேலும், ராதிகாவை அழைத்து விசாரித்ததில் அவரும் ஈஸ்வரிக்கு எதிராக சாட்சி கூறிவிட்டார். இதனால் ஈஸ்வரி வெளியே வருவார் என்பதில் சந்தேகம் தான். மேலும் இறுதியில் வக்கீல் பாக்கியலட்சுமியிடம் விசாரணை நடத்துகிறார். நாளை தான் தீர்ப்பு கூறுவார்கள் என்று தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com