ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் சரிகமபா சிறுவர்களுக்கான பாடல் போட்டியில் இலங்கை கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார். இந்த கடைசி நொடி வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் பாடல், நடனம் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அப்படி ஜீ தமிழில் ஒளிப்பரப்பப்படும் சரிகமபா நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. சரிகமப இசை நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து அசானி மற்றும் கில்மிஷா ஆகிய இரண்டு பேர் கலந்து கொண்டார்கள். இறுதி சுற்றுக்கு தேர்வான 6 பேரில் ஒருவரான கில்மிசா வெற்றி பெற்று இலங்கைக்கே பெருமை சேர்த்துள்ளார்.
தொடர்ந்து, இரண்டாவது இடத்தினை சஞ்சனாவும், மூன்றாவது இடத்தினை ரிக்ஷிதாவும் பிடித்திருந்தனர். மேலும், வெற்றிபெற்ற கில்மிஷாவுக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.