சீரியல் நடிகை ஸ்ரீதேவிக்கு பிரம்மாண்ட வளைகாப்பு: வைரலாகும் போட்டோஸ், வீடியோஸ்!

நடிகை ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி

சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நிலையில், இவருக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.

நடிகர் தனுஷ் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான 'புதுக்கோட்டையில் இருந்து சரவணன்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஸ்ரீதேவி. இதையடுத்து, ‘கிழக்கு கடற்கரை சாலை’ படத்தில் நடித்த இவர், பட வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல் பக்கம் ஒதுங்கினார்.

இதைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான, செல்லமடி நீ எனக்கு, தங்கம், இளவரசி, கல்யாண பரிசு, நிலா போன்ற சீரியல்களில் நடித்தார். இதேபோன்று ஜீ தொலைக்காட்சி, விஜய் டிவியின் பிரபல சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். தற்போதும் கூட மோதலும் காதலும், பொன்னி ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் சில சீரியல்களில் நடித்துள்ள ஸ்ரீதேவி, அசோகா சிண்டாலா என்பவரை கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு சித்தாரா என்ற 5 வயது பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்தார்.

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஸ்ரீதேவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு, ஸ்ரீதேவியை வாழ்த்தி உள்ளனர். தற்போது இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், ஸ்ரீதேவிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com