கணவரை இழந்த சீரியல் நடிகை... மீண்டும் சன் டிவியில் எண்ட்ரி கொடுத்து அசத்தல்!

sruthi shanmuga priya
sruthi shanmuga priya

சன் டிவியில் மீண்டும் எண்ட்ரி கொடுத்த நடிகை ஸ்ருதி சண்முக பிரியாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நாதஸ்வரம் சீரியலில் திருமுருகனின் தங்கைகளுள் ஒருவராக நடித்து அசத்தியவர் ஸ்ருதி சண்முக பிரியா. இவர் 1993 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தவர். குடும்ப உறவுகளின் கதையை மையமாகக் கொண்ட இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. 1000 எபிசோட்களை கடந்து நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த தொடருக்கு பின்னர் பொன்னூஞ்சல், கல்யாண பரிசு, வாணி ராணி, பொம்முகுட்டி அம்மாவுக்கு போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதேபோல இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் கூட நடித்திருக்கிறார். கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் கூட இருந்த பாரதிகண்ணம்மா தொடரில் நடித்தார். இதற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்த இவர், எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார்.

இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்ற அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படம், வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இருவரும் தங்களது வாழ்க்கையை நன்றாக கழித்து கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பால் இவரது கணவர் உயிரிழந்தார். திருமணமான ஒரே ஆண்டில் கணவர் உயிரிழந்ததால் மனமுடைந்த ஸ்ருதி சண்முக பிரியா, வீட்டிலேயே முடங்கினார். இவருக்கு அவரது ரசிகர்கள், பலரும் ஆறுதல் தெரிவித்து வந்த நிலையில், தற்போது புது சீரியலில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

அதாவது சன் தொலைக்காட்சியில் சஞ்சீவ் மற்றும் சுருதி நடிக்கும் லட்சுமி தொடரில் தான் ஸ்ருதி சண்முக பிரியா நடிக்கிறார். அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த அவர், தனது புது ஜார்னி குறித்து பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com