"தப்பு தப்பா போடாதீங்க" சீரியல் நடிகை ஸ்ருதி வருத்தம்!

ஸ்ருதி சண்முகப்பிரியா
ஸ்ருதி சண்முகப்பிரியாIntel
Updated on

கணவரின் மறைவு குறித்து தவறாக கூற வேண்டாம் என நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா வீடியோ வெளியிட்டுள்ளார்.

திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடரின் மூலம் பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. நாதஸ்வரம் சீரியலில் கோபியின் நான்கு தங்கைகளில் ஒருவராக நடித்த இவர் அதன் பின்னர் வாணி ரானி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல், பாரதி கண்ணம்மா என அடுத்தடுத்து ஹிட் சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

இந்த நிலையில் கோவையை சேர்ந்த ஸ்ருதி சண்முகபிரியாவிற்கும் அவரது காதலர் அரவிந்த் சேகருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் சென்னையில் தங்கியிருந்த நிலையில், திடீரென அரவிந்த் சேகர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதை அறிந்த பலரும் இரங்கல் பதிவும் ஸ்ருதிக்கு ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகை ஸ்ருதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன வருத்தத்துடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் தன் கணவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகவும், தவறாக வேறு எதுவும் எழுத வேண்டாம் எனவும் யூடியூப் சேனல்கள், நியூஸ் சேனல்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்த மாதிரியான செயல்கள் வீட்டில் உள்ள பெரியவர்களை பாதிப்பதாகவும், தாங்கள் மீண்டு வர முயற்சிப்பதாகவும் பேசியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com