குக்வித் கோமாளி சீசன் 4 ஷூட்டிங் நிறைவு.. நெகிழ்ச்சியுடன் குட்பை சொன்ன சிவாங்கி!

சிவாங்கி
சிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் மாபெரும் வெற்றி நடைபோடும் நிகழ்ச்சி என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது 'குக் வித் கோமாளி" தான். உலகளவில் பார்வையாளர்களை கொண்டுள்ள 'குக் வித் கோமாளி', முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சமையல் நிகழ்ச்சியை நடத்துவதே இதன் தனி சிறப்பு என்று கூறலாம்.

குக்குடன் கோமாளி சேர்ந்து நகைச்சுவையுடன் சமைக்கும் இந்த நிகழ்ச்சி 3 சீசன்களை கடந்து, வெற்றிகரமான 4 வது சீசனை நடத்தி கொண்டிருக்கிறது. இந்த சீசன் தற்போது தனது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற வைல் கார்டு எண்ட்ரியில் ஆண்ட்ரியன் வெற்றிபெற்றார்.

இந்த நிலையில் அடுத்த வாரம் ஃபைனல்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என தெரிகிறது. இதற்கிடையில் நேற்று இரவுடன் ஃபைனல்ஸ் நிகழ்ச்சி ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதில் வின்னர் சிவாங்கி அல்லது ஆண்ட்ரியன் என இருவரில் ஒருவர் தான் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் இல் கோமாளியாகவே வலம் வந்த சிவாங்கி பல இன்னல்கள், பயிற்சிகளை தாண்டி சீசன் 4-இல் குக்காக களமிறங்கினார். அடுத்தடுத்து அல்டிமேட்டாக சமைத்து செஃப்ஃபின் கைதட்டு பாராட்டுக்களை பெற்றுவந்தார். 2 முறைக்கு மேலாக இம்மியூனிட்டி பேண்டும் வாங்கி அசத்தினார். ஒரு முறை எலிமினேஷனுக்கு சென்ற சிவாங்கி விடாமுயற்சியால் வெற்றி பெற்று பைனல்ஸ் வரைக்கும் வந்துள்ளார். இந்த நிலையில், தனது கடைசி நாள் குறித்து சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதில், தற்போது குக் வித் கோமாளி 4வது சீசன் செட்டில் கடைசியாக எடுத்த புகைப்படத்தை போட்டு எமோஷ்னலாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "4 வருடம்.. ஏகப்பட்ட நினைவுகள். நிறைய கனவு தருணங்கள். மிகவும் கடினமாக குட் பாய்" எனத் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com