விஜய் டிவி ஹிரோயினை கரம்பிடிக்கும் சன் டிவி ஹீரோ.!

சீரியல் நடிகர்கள்
சீரியல் நடிகர்கள்

சீரியல் ஹீரோ - ஹீரோயின் காதலித்து திருமணம் செய்து கொள்வது வாடிக்கையாகி வருகிறது. அப்படி தான் ராஜா ராணி ஆலியா சஞ்சீவ் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து செய்தி வாசிப்பாளர் கண்மனியை சீரியல் நடிகர் நவீன் திருமணம் செய்து கொண்டார். இப்படி பல பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன் வரிசையில் தான் இப்போது ஒரு புது ஜோடி இணைந்துள்ளது.

சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கி சில வாரங்களிலேயே டாப் இடத்தை பிடித்து இருக்கிறது சிங்கப்பெண்ணே சீரியல். ஏற்கனவே டிஆர்பியில் முதலிடத்தில் இருந்த கயல் சீரியலை இது பின்னுக்கு தள்ளிவிட்டது.

சிங்கப்பெண்ணே தொடரில் ஹீரோவாக நடித்து வரும் அமல்ஜித் பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது அவருக்கும் விஜய் டிவி நடிகைக்கும் திருமணம் நடைபெறவுள்ளது என தெரியவருகிறது.

விஜய் டிவியில் கண்ணே கலைமானே சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் பவித்ரா அரவிந்த் என்பவரை தான் அமல்ஜித் காதலித்து வருகிறார். அவர்கள் காதலுக்கு வீட்டில் ஒப்புதல் கிடைத்துவிட்டதால் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருவரின் புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com