சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில், அன்பு ஆனந்தி மற்றும் வார்டன் ஆகியோர் ஆனந்தி வீட்டுக்கு உண்மையை சொல்ல போகிறார்கள். அப்போது அதை தடுப்பதற்கெனவே சுயம்புலிங்கம் உள்ளே வருகிறார்.
அன்பு ஆனந்தி மகேஷ் என்ற முக்கோண காதல் கதைதான் சிங்கப்பெண்ணேவின் முழு கதையும். அன்பு மற்றும் ஆனந்தி காதலிப்பது மகேஷுக்கு தெரியாமல் இருக்கிறது. ஆனால் மகேஷ், ஆனந்தி மீதுள்ள காதலில் பலவற்றை தியாகம் செய்கிறார். ஆனந்தி, அன்பு தானும் காதலிப்பதாக மகேஷிடம் கூறிவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.
இதன் முதற்கட்டமாக வார்டனிடம் தன்னுடைய காதலைப் பற்றி கூறுகிறார். இது அவருக்கும் மிகவும் ஷாக் ஆகிறது. ஏனெனில் மகேஷுடன் ஆனந்தியை சேர்த்து வைக்க வார்டன் ப்ளான் செய்தார். ஆனால், இப்போது ஆனந்தியின் முடிவு அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும், அவளின் உணர்வை மதிக்கிறார். மேலும் ஆனந்தி நானும் அன்புவும் காதலிப்பதை நீங்கள்தான் மகேஷிடம் கூற வேண்டும் என்று வார்டனிடம் கூறிவிடுகிறார்.
வார்டன் முயற்சி செய்து முடியவில்லை. தற்போது ஆனந்தி அன்பு காதலுக்கு உதவி செய்வதாக வேலு கூறினாலும், அவன் பேச்சை அழகப்பன் கேட்க வாய்ப்பே கிடையாது.
இதனால், இதன் அடுத்தகட்டமாக, மகேஷை ஆனந்தியின் வீட்டிற்கு கூட்டி சென்று பெண் கேட்டது வார்டன் தான். நீங்க ஆரம்பிச்சத நீங்களே முடிச்சு வைங்க என்று சொல்லி ஆனந்தி வார்டனை அவளுடைய வீட்டிற்கு கூப்பிடுகிறாள்.
இதனையடுத்து ஆனந்தி அன்பு வார்டன் மூவரும் காரில் ஆனந்தி வீட்டுக்கு செல்கிறார்கள். அப்போது இடையே சுயம்புலிங்கம் காரை நிறுத்துகிறார். உடனே அன்பு ஆனந்தி இருவரும் மறைந்துக் கொள்கிறார்கள். வார்டனிடம் சுயம்புலிங்கம் என்ன இந்த முறை யாரை மாப்பிள்ளையா கூட்டிட்டு வந்து இருக்கீங்க என்று கேட்கிறான்.
இது ஆனந்திக்கு கோபத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதனால், வீட்டுக்குச் செல்லாமல் வந்த வழியே செல்லவும் வாய்ப்புள்ளது.
சுயம்புலிங்கத்தை கருவியாக பயன்படுத்தியதே மித்ராதான். ஏனெனில், அப்போதுதான் ஆனந்தியை மகேஷ் வெறுப்பான்.