சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே தொடரில், மகேஷ் மீண்டும் வார்டனை சந்திக்கப்போகிறார். மறுபக்கம் தில்லைநாதன் அன்பு மற்றும் ஆனந்தியை மீண்டும் வேலைக்கு வரும்படி கூற அவர்களைத் தேடி போகிறார்.
அன்பு ஆனந்தி மகேஷ் என்ற முக்கோண காதல் கதைதான் சிங்கப்பெண்ணேவின் முழு கதையும். அன்பு மற்றும் ஆனந்தி காதலிப்பது மகேஷுக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் மகேஷ், ஆனந்தி மீதுள்ள காதலில் பலவற்றை தியாகம் செய்தார்.
இதனால் ஆனந்தி, அன்புவும் தானும் காதலிப்பதாக மகேஷிடம் கூறிவிட வேண்டும் என்று முடிவெடுத்தார். அவ்வாறே அன்பு மற்றும் ஆனந்தியின் காதல் குறித்து மகேஷுக்கு தெரியவந்தது முதல், அவர் இருவருக்கும் எதிராக மாறினார். அன்புக்கும் மகேஷுக்கும் பல சண்டைகள் கூட வந்தன. அன்பு மீது வீண் பழி சுமத்தப்பட்டது. ஒரு வழியாக அன்பு தன் மீது விழுந்த பழியை முழுவதுமாக நீக்கி விட்டான்.
நேற்றைய எபிசோடில் அன்புவின் அம்மா, அன்புவையும் ஆனந்தியையும் இவ்வளவு கஷ்டப்படுத்தும் இந்த கம்பெனி தேவையில்லை இன்று கூறிவிடுகிறார்.
அந்தவகையில் இன்றைய ப்ரோமோவில், தில்லைநாதன் அன்பு மற்றும் ஆனந்தி இருவரையும் தேடி வீட்டிற்கு செல்கிறார்.
தில்லைநாதன் இருவரையும் மீண்டும் கம்பெனிக்கு வேலை பார்க்க வர கூறிதான் இவர்களை சந்திக்க வந்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவரின் வார்த்தகளை மதித்து அவர்கள் இருவரும் மீண்டும் கம்பேனிக்கு சென்றால், தொடர்ந்து பல சிக்கல்கள் ஏற்படும் என்பதில் சந்தேகமேயில்லை.
அரவிந்த் இவர்களை என்னவேண்டுமென்றாலும் செய்ய வாய்ப்பிருக்கிறது.
மறுபக்கம் மகேஷ் வார்டனை தேடி செல்கிறான். அங்கு சென்று 'என் அம்மா மடியில் படுத்துக்கொள்ளலாமா' என்று கேட்கிறான். உடனே வார்டன் உருகிவிட்டார். அங்கு ஒரு பாச போராட்டமே நடக்கிறது.
இதனால் தொடர்ந்து மகேஷ் ஹாஸ்டலுக்கு போக நிறைய வாய்ப்பு இருக்கிறது. இது எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதற்கு சமமாகிவிடும். தில்லைநாதனின் பேச்சை கேட்டு அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் கம்பெனிக்கு செல்கிறார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம்.