
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில் முத்து திருமணத்தை நிறுத்திய நிலையில், குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
விஜய் டிவியில் பல வருடங்களாக டாப் இடத்தில் ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. ரோகிணி மாட்டுவாரா, என்றே தான் ரசிகர்களும் ஆர்வமாக கதையை கவனித்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ரோகிணி பணக்காரி இல்லை என்ற உண்மையை மொத்த குடும்பமும் அறிந்து கொண்டது. இதையடுத்து ரோகிணியை விஜயா அடித்த அடி பலரையும் மெய்சிலிர்க்க செய்தது என்றே சொல்லலாம். பிறகு எப்படியோ வீட்டிற்குள் வந்த ரோகிணி விஜயா மனதை மாற்ற தினசரி போராடி வருகிறார். அதில் ஒன்று தான் நகை வாங்கி கொடுத்தது. அது திருட்டு நகை என கண்டுபிடித்து நகையின் உரிமையாளர் அதை விஜயாவிடம் இருந்து பிடுங்கி சென்றுவிட்டார்.
இதனால் கோபமடைந்த விஜயா, ரோகிணியிடம் 1 லட்ச ரூபாய் ஃபைன் போடுகிறார். இதனை எங்கே வாங்குவது என்று தெரியாமல் திணறிய ரோகிணி, வித்யாவின் காதலரிடம் கடன் கேட்க, கடுப்பான வித்யா ரோகிணியின் உறவை முறித்துவிடுகிறார்.
பிறகு ஸ்ருதியின் தாயிடம் சென்று ரோகிணி 2 லட்சம் கடன் வாங்குகிறார். அவர்களும் ரோகிணியை பகட காயாக வைத்து ஸ்ருதி - ரவியை குடும்பத்தில் இருந்து பிரிக்க திட்டமிடுகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க சீதாவின் காதலை சேர்த்து வைக்க மீனா போராடி வந்த நிலையில் ஒரு வழியாக முத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். முத்துவின் குடும்பத்தார் சீதாவிற்கு திருமண ஏற்பாடுகளுக்கு உதவி செய்ய, தடபுடலாக திருமண வைபவம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில், மண்டபத்தில் திருமண சடங்குகள் நடைபெற்று வருகிறது. அப்போது அருணுடன் வேலை பார்க்கும் போலீசார், அவரின் மனைவியிடம் எதார்த்தமாக இது அருணுக்கு 2வது திருமணம் என்று கூற இந்த செய்தி மண்டபம் முழுவதும் காட்டு தீயாக பரவியது.
இதை அறிந்து கொண்ட முத்து, தாலிகட்டும் நேரத்தில் அருணை மணமேடையில் இருந்து தரதரவென இழுத்து சென்று இது உனக்கு 2வது திருமணமா என கேட்கிறார். அருணும் ஆம் என்று கூற ஒட்டு மொத்த குடும்பமும் திகைத்து நிற்கின்றனர். வேறு பெண்ணுடன் தான் ஏற்கனவே திருமணம் செய்திருக்கிறார் என்று நினைத்து மொத்த குடும்பமும் அருணை திட்டி தீர்க்கவே, கடைசியில் கடுப்பான அருண் ஏற்கனவே நடந்த திருமணமும் சீதாவுடன் தான் என்று கூறுகிறார். இதனை பார்த்த முத்து அதிர்ச்சியடைகிறார்.
நாளைக்கான புரோமோவில், அருணின் நண்பர் மீனாதான் சீதாவிற்கு சாட்சி கையெழுத்து போட்டத்தை கூறுகிறார். இதனால் கோபமடைந்த முத்து என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை. சீதாவின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக மீனா எடுத்த முயற்சி அவரின் வாழ்க்கையை தற்போது காப்பாற்றுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.