
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து சீதாவின் திருமணத்திற்கு ஒப்பு கொண்டார்.
விஜய் டிவியில் பல வருடங்களாக டாப் இடத்தில் ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. ரோகிணி மாட்டுவாரா, என்றே தான் ரசிகர்களும் ஆர்வமாக கதையை கவனித்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ரோகிணி பணக்காரி இல்லை என்ற உண்மையை மொத்த குடும்பமும் அறிந்து கொண்டது. இதையடுத்து ரோகிணியை விஜயா அடித்த அடி பலரையும் மெய்சிலிர்க்க செய்தது என்றே சொல்லலாம். பிறகு எப்படியோ வீட்டிற்குள் வந்த ரோகிணி விஜயா மனதை மாற்ற தினசரி போராடி வருகிறார். அதில் ஒன்று தான் நகை வாங்கி கொடுத்தது. அது திருட்டு நகை என கண்டுபிடித்து நகையின் உரிமையாளர் அதை விஜயாவிடம் இருந்து பிடுங்கி சென்றுவிட்டார்.
இதனால் கோபமடைந்த விஜயா, ரோகிணியிடம் 1 லட்ச ரூபாய் ஃபைன் போடுகிறார். இதனை எங்கே வாங்குவது என்று தெரியாமல் திணறிய ரோகிணி, வித்யாவின் காதலரிடம் கடன் கேட்க, கடுப்பான வித்யா ரோகிணியின் உறவை முறித்துவிடுகிறார்.
பிறகு ஸ்ருதியின் தாயிடம் சென்று ரோகிணி 2 லட்சம் கடன் வாங்குகிறார். அவர்களும் ரோகிணியை பகட காயாக வைத்து ஸ்ருதி - ரவியை குடும்பத்தில் இருந்து பிரிக்க திட்டமிடுகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க சீதாவின் காதலை சேர்த்து வைக்க மீனா போராடி வருகிறார். யாரும் அவர்களை பிரித்து விடக்கூடாது என நினைத்த மீனா, முன்கூட்டியே ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துவிடுகிறார். ஆனால் இன்றைய எபிசோட்டில் முத்து மனசு மாறவே, மீனாவுக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது.
சீதாவுக்கு சேலை வாங்கி வந்த முத்து, நாளை அருணை வீட்டிற்கு வர சொல்கிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த சீதா, முத்துவிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார். மீனாவும் இதனால் மகிழ்ச்சியடைந்து முத்துவுக்கு நன்றி தெரிவிக்கிறார். ஆனால் முன்கூட்டியே ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து வைத்ததை நினைத்து வருந்துகிறார். இது முத்துவுக்கு தெரியவந்தால் என்ன நடக்கப்போகிறது என்று தான் ரசிகர்கள் ஆவலாக காத்து கொண்டிருக்கின்றனர்.
நாளைக்கான புரோமோவில் வீட்டிற்கு திருமண பேச்சிற்காக வந்த அருண், அண்ணாமலையிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். அதில், எனது திருமணத்திற்கு பெரிய போலீஸ் அதிகாரிகள் வருவார்கள். யாரும் குடித்துவிட்டு வரக்கூடாது என்று முத்துவை மனதில் வைத்து கூறுகிறார். இதனால் முத்து மீண்டும் கோபப்படுவாரா என மொத்த குடும்பமும் அச்சத்தில் உறைகின்றனர். ஆனால் முத்து என்ன பதில் சொல்வார் என்று பொருத்திருந்து பார்க்கலாம்.