Siragadikka aasai |மாட்டி கொண்ட ரோகிணி.. பளார் விட்ட மீனா.. அடுத்து என்ன நடக்கும்?
சிறகடிக்க ஆசை சீரியலில் வர வாரத்தில் ரோகிணி வசமாக சிக்கி கொள்ளவுள்ளார். ஏற்கனவே மாட்டிய பிரச்சனைக்கே இப்போதுதான் தீர்வு கண்டுள்ள நிலையில், மீண்டும் சிக்கி கொள்ளவுள்ளார்.
விஜய் டிவியில் பல வருடங்களாக டாப் இடத்தில் ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. ரோகிணி மாட்டுவாரா, என்றே தான் ரசிகர்களும் ஆர்வமாக கதையை கவனித்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ரோகிணி பணக்காரி இல்லை என்ற உண்மையை மொத்த குடும்பமும் அறிந்து கொண்டது. இதையடுத்து ரோகிணியை விஜயா அடித்த அடி பலரையும் மெய்சிலிர்க்க செய்தது என்றே சொல்லலாம். பிறகு எப்படியோ வீட்டிற்குள் வந்த ரோகிணி விஜயா மனதை மாற்ற போராடி வந்தார். ஒரு வழியாக இந்த வாரம் தான் மனோஜிற்கு ஒரு பெரிய ஆர்டர் பிடித்து கொடுத்ததன் பேரில், விஜயா மனசு மாறி அவரை மருமகளாக மீண்டும் ஏற்றுகொண்டுள்ளார்.
ஆனால் அதற்குள் அடுத்த ஆப்பு என்பது போல் ரோகிணியின் முன்னாள் கணவர் குடும்பத்தினர் சென்னைக்கு வந்து அவரை டார்ச்சர் செய்து வருகின்றனர்.
இதனால் எப்படியும் மீண்டும் ரோகிணி சிக்கவுள்ளார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். முன்னாள் திருமண விஷயம் விஜயாவிற்கு தெரியவந்தால் என்ன நடக்கும் என்றே தான் கதை நகர்கிறது.
இந்த நிலையில் ரோகிணியின் முன்னாள் கணவரின் அண்ணன் மற்றும் அவரது மனைவி ரோகிணியின் நெருங்கிய தோழியான வித்யாவின் கணவரின் சொந்தமும் கூட. இப்படி இவர்களை முடித்து போட்டு வைத்த இயக்குனர், ரோகிணியை மாட்ட வைக்க நன்றாக ஸ்கெட்ச் போட்டிருக்கிறார். இவர்களை வெளியே அழைத்து செல்வதற்காக முத்துவையே கார் டிரைவராக அனுப்புகிறார்கள். ஆனால் ரோகிணியோ அதில் முட்டுக்கட்டை போடும் விதமாக வீட்டில் அண்ணாமலையை தனியாக விட்டால் முத்து எங்கேயும் செல்ல மாட்டார் என நினைத்து பெண்களுக்கு ட்ரிப் போடுகிறார். அவரின் திட்டத்தின் படியே முத்துவும் அந்த ட்ரிப்பை செல்வத்திடம் ஒப்படைத்துவிட்டு வீட்டிலேயே இருக்கிறார்.
ஆனால் அங்கே தான் பெரிய ட்விஸ்ட். ஒரு நாள் கார் ஓட்ட சென்ற செல்வம், மறுநாள் அதை முத்துவிடமே ஒப்படைக்கிறார். முத்துவும் தந்தையை பார்க்கும் பொறுப்பை ரவியிடம் கொடுத்துவிட்டு செல்கிறார். இந்த நேரத்தில் அவர் மாட்டுவார் என்று எதிர்பார்க்கும் நிலையில், தீபாவளிக்கு பாட்டி ஊருக்கு செல்லும் மீனா, அங்கே ரோகிணி திதி கொடுத்து கொண்டிருக்கும் போது கையும் களவுமாக பிடித்துவிடுகிறார். அது தொடர்பாக வெளியான புரோமோ பலரையும் ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்தவாரத்திற்கான புரோமோவில், தனது தந்தைக்கு திதி கொடுக்கும் போது, ரோகிணியின் தாயார், இதுதான் எனது ஒரே மகள் கல்யாணி என்றும், இது அவரின் மகன் க்ரிஷ் என்றும் கூறுகிறார். இதனை கேட்ட மீனா, ரோகிணியின் கன்னத்தில் பளார் விடுகிறார். பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தாலும் இது உண்மையில் நிகழுமா அல்லது கனவாகிவிடுமா என ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்து கொண்டிருக்கின்றனர். எதுவாக இருந்தாலும் வரும் வார எபிசோட்டிலேயே தெரியவரும்.

