
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கதையும், சீதா கதையும் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது.
விஜய் டிவியில் பல வருடங்களாக டாப் இடத்தில் ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. ரோகிணி மாட்டுவாரா, என்றே தான் ரசிகர்களும் ஆர்வமாக கதையை கவனித்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ரோகிணி பணக்காரி இல்லை என்ற உண்மையை மொத்த குடும்பமும் அறிந்து கொண்டது. இதையடுத்து ரோகிணியை விஜயா அடித்த அடி பலரையும் மெய்சிலிர்க்க செய்தது என்றே சொல்லலாம். பிறகு எப்படியோ வீட்டிற்குள் வந்த ரோகிணி விஜயா மனதை மாற்ற தினசரி போராடி வருகிறார். அதில் ஒன்று தான் அவரின் மனதில் நல்ல இடத்தை பிடிக்க, செயின் வாங்கி கொடுத்தது. சிட்டி குறைந்த விலைக்கு கொடுத்த நகையை மாமியாருக்காக வாங்கி விஜயாவிடம் கொடுத்தார். தற்போது இன்றைய எபிசோட்டில் விஜயா, சிந்தாமணி வீட்டு விசேஷத்திற்கு இந்த நகையை போட்டு செல்ல, அங்கு வந்த நகையின் உரிமையாளர், இது எனது நகை, இது திருட்டு போகிவிட்டதாக கூறி, விஜயாவை அசிங்கமாக திட்டி நகையை வாங்கிவிட்டு செல்கிறார்.
இதனால் மனமுடைந்த விஜயா, வீட்டிற்கு வந்து கோபமாக உட்கார்ந்திருக்கிறார். அப்போது ரோகிணி, சேலை வாங்கி வந்து கொடுக்கிறார். இதனை வாங்கி தூக்கி எறிந்த விஜயா, ரோகிணியை எங்கே திருடினாய் என கேட்டு அடித்து துவைக்கிறார். அதன் பிறகு இது திருட்டு நகை இல்லை, குறைந்த விலைக்கு வாங்கியதாக ஒப்புக்கொள்கிறார். உடனே விஜயா, எனக்கு ஒரு லட்சம் ரூபாய் நீ தரவேண்டும் என கூறிவிட்டு செல்கிறார். ரோகிணியோ சிட்டி குறித்த உண்மையையும் கூறமுடியாமல், நகையையும், பணத்தையும் இழந்த வருத்தத்தில் வேதனையாக இருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க தனது தங்கை ஆசைப்பட்ட நபருடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மீனா, அடுத்த வார எபிசோட்டில், அருணுக்கும் - சீதாவுக்கும் பதிவு திருமணம் செய்து வைக்கிறார். இது தொடர்பான புரோமோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அதில், திருமணம் முடிந்து மீனா வெளியே செல்லும் நேரத்தில், முத்து ரெஜிஸ்டர் ஆபிஸிற்குள் வருகிறார். இதனால் இருவருக்கும் அடுத்து என்ன நடக்கும். முத்து இதை ஏற்றுக்கொள்வாரா என்று அடுத்த வாரம் பொறுத்திருந்து பார்க்கலாம்.