விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' தொடர், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் தொடரில், 'மீனா' என்ற கதாபத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை கோமதி பிரியா. சமீப காலமாக, கோமதி பிரியா தொடரில் இருந்து விலகிவிட்டதாகவும், அவருக்கு திருமணம் நடைபெறப் போவதாகவும் சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் பரவின. மேலும் அவர் தெலுங்கு குக் வித் கோமாளியில் பங்கேற்பதால், அவர் சீரியலை விட்டு விலகுகிறார் என்ற வதந்திகள் பரவின. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கோமதி பிரியா தற்போது ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
"நான் 'சிறகடிக்க ஆசை' தொடரில் இருந்து விலகவில்லை. 700 எபிசோடு தாண்டிய நிலையில் இன்னும் ஆயிரம் எபிசோடுக்கு மேல் வந்தாலும் முத்து மற்றும் மீனா அவர்களுடைய கதாபாத்திரத்தில் இருந்து விலகுவதற்கு ஐடியாவே இல்லை.
விண்ணைத்தாண்டி வருவாயா ஜெசி போல் நான் தயாராகி விட்டேன். மற்றப்படி இப்போதைக்கு கல்யாணம் இல்லை. " என்று கோமதி பிரியா தெளிவாகக் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தியுள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியலில், மீனா என்ற கிராமத்து அப்பாவிப் பெண்ணின் கதாபாத்திரத்தில் கோமதி பிரியா மிக யதார்த்தமாக நடித்து வருகிறார். அவரது இயல்பான நடிப்பு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தொடக்கத்தில் சற்று தயக்கத்துடன் இருந்த மீனா, தற்போது தனது கணவர் முத்துவுடன் இணைந்து குடும்பப் பொறுப்புகளை உணர்ந்து செயல்படும் விதம், பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
முத்து மற்றும் மீனா இடையேயான காதல் காட்சிகள், குடும்பப் பிரச்சனைகள், மற்றும் அவற்றிலிருந்து அவர்கள் மீண்டு வரும் விதம் ஆகியவை தொடரின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
இந்த வதந்திகள் பரவிய சமயத்தில், ரசிகர்கள் பலர் கோமதி பிரியாவின் சமூக வலைத்தள பக்கங்களில் இது குறித்து கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது அவரே நேரடியாக விளக்கம் அளித்திருப்பது, அனைத்து யூகிப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 'சிறகடிக்க ஆசை' தொடர், டி.ஆர்.பி.யில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. இந்தத் தொடரின் வெற்றிக்கு கோமதி பிரியாவின் பங்களிப்பு முக்கியமானது என்பதை மறுக்க முடியாது. அவரது தெளிவான விளக்கம், தொடரின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. வரும் நாட்களில், மீனா கதாபாத்திரத்தின் பயணம் எப்படி இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.