விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வெற்றிகரமாக ஓடிவரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய ப்ரோமோ குறித்து பார்ப்போம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் பலருக்கும் பிடித்தமான சீரியலாகும். இந்தத் தொடர் விஜய் டெலி அவார்ட்ஸில் நிறைய விருதுகளை தட்டிச்சென்றது. சிறந்த நாயகன், நாயகி, தொடர் என பல விருதுகளை சீரியல் பெற்றது.
அந்தவகையில் இந்த வாரம் விஜயா மீனா சண்டைதான் சுவராஸ்யமாக உள்ளது. விஜயா திடீரென்று மீனாவை தனக்கு சாப்பாடு எடுத்துவரும்படி கூறிவிடுகிறார். முத்து ஷாக்கில் 'என்ன புதுசா?' என்று கேட்கும்போது, விஜயா மாமியாருக்கு ஒரு மருமகள் இதுக்கூட செய்யக்கூடாதா? என்று கேட்டதும், மீண்டும் அதிர்ச்சியாகிறார் முத்து.
பின் மீனாவே சமைத்து விஜயாக்கு எடுத்து செல்கிறார். ஆனால், செல்லும் வழியில் ஒரு வயதான பாட்டி தாத்தாவிற்கு அந்த உணவைக் கொடுத்துவிட்டு, விஜயாவுக்கு கடையில் பிரியாணி வாங்கித் தந்துவிடுகிறார். விஜயாவும் நன்றாக சாப்பிட்டு வீட்டுக்கு வந்தவுடன், உணவு செரிக்காமல் அவதிப்படுகிறார். இதனையடுத்து விஜயா தான் பிரியாணி சாப்பிட்டதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறுகிறார். உடனே அவர்கள், 'அதான் மீனா கீரை, அது, இதுன்னு செஞ்சுருக்காள, நீ எதுக்கு கடைல வாங்கி சாப்ட்ட?' என்று கேட்டவுடன்தான் விஜயாவுக்கு உண்மைத் தெரிய வருகிறது. உடனே மீனாவிடம் சண்டைக்குப் போகிறார். நம்ம வீட்டு சோத்த வழில போற வரவங்கக்கிட்டலாம் கொடுப்பியா என்று சண்டையிடுகிறார். உடனே மீனா அந்த பாட்டி மயக்கம்போட்ட விஷயத்தையும் சொன்னார்.
ஆனாலும் விஜயா கேட்கவில்லை, சண்டைக்குப்போகிறார். அதற்கு மீனா எதுவும் பேசவில்லை. ஆனால், முத்து மீனாவிற்கு ஆதரவாக நின்று பேசுகிறார்.
‘ஒரு ஒரு சோறுலையும் அத சாப்பட்றோங்க பேர் இருக்கும், இந்தமுறை அவுங்க பேரு எழுதிருக்கு, எனக்கு அவ அப்டி செஞ்சது பெருமையா தான் இருக்கு’ என்று விஜயாவிடம் கூறுகிறார். ஆனால், விஜயா சமாதானம் ஆனதுபோல் தெரியவில்லை.
இந்த வாக்குவாதமே நாளை வரை நீடிக்கும் என்பதுபோல ப்ரோமோ அமைந்திருக்கிறது.