லேடி கெட்டப்பில் கலக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்... வைரலாகும் போட்டோ!

Siragadikka Aasai
Siragadikka Aasai

விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் லேடி கெட்டப்பில் இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீரியலுக்கென்றே ஊர்களில் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. காலையில் சீரியல் தொடங்கினால் இரவில் தூங்கும் வரை சீரியலிலேயே ஊறும் ரசிகர்களும் இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில், தற்போது, விஜய் டிவி டிஆர்பியை தூக்கி நிறுத்தும் ஒரு தொடராக இப்போது உள்ளது சிறகடிக்க ஆசை சீரியல். குடும்பங்கள் கொண்டாடும் ஒரு தொடராக இருக்கிறது, அதிலும் முத்து-மீனா என்ற கதாபாத்திற்கு நிறைய ரசிகர்கள் கூட்டம் உள்ளார்கள். இவர்களை வைத்து நிறைய வீடியோக்களை ரசிகர்களும் எடிட் செய்து இன்ஸ்டாவில் வைரலாக்கி வருகிறார்கள். இந்த தொடர் தான் விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது. இந்த சீரியல் இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையை சேர்ந்தவர்களையும் கவர்ந்துள்ளது.

இந்த தொடரை சன் டிவி புகழ் திருமதி செல்வம் தொடரை இயக்கிய இயக்குனர் எஸ்.குமரன் தான் இயக்கி வருகிறார். இதில், பிரதான வேடத்தில் வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா நடிக்கிறார்கள். மேலும் இந்த சீரியலில் மிகவும் காமெடியாகவும், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகர் ஸ்ரீதேவா. அதாவது முத்து கதாபாத்திரத்திற்கு சகோதரனாக நடிக்கும் மனோஜ் கதாபாத்திரம் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
விமர்சனங்களுக்கு இளையராஜா கொடுத்த நச் பதில்... வைரலாகும் வீடியோ!
Siragadikka Aasai
Siragadikka Aasai Serial actor
Siragadikka Aasai Serial actor

இவர் தற்போது சீரியலில் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார். இதனை புகைப்படமாக எடுத்து நடிகர் ஸ்ரீதேவா அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்னும் இந்த எபிசோட் வெளியாகாத நிலையில், மனோஜின் இந்த லேடி கெட்டப்பை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும் தங்களது கமெண்ட்களை தட்டி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com