முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருக்கு சவுந்தர்யா Will you marry me என்று கேட்டு ப்ரொபோஸ் செய்திருக்கிறார். இந்த ப்ரோமோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, ரஞ்சித், விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். மேலும் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 6 பேர் பங்கேற்றனர். இதனையடுத்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித் ஆகியோர் வெளியேறியிருக்கிறார்கள்.
ஆனால், சமீபக்காலமாக போட்டியாளர்கள் போட்டிகளில் சீரியஸாக விளையாடுவது கிடையாது. இதனால் பிக்பாஸுக்கே கோபம் வருகிறது. போன வாரம் பெரிய ரணகளமாக இருந்த பிக்பாஸில், இந்த வாரம், ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்தார்கள். அந்தவகையில் இன்று போட்டியாளர்களின் நண்பர்கள் வீட்டிற்கு வருகின்றனர்.
அதன் முதல் படியாக கடந்த சீசன் போட்டியாளர் விஷ்ணு வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவருடைய வருகை சௌந்தர்யாவுக்காக தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஜாக்லினிடம் சொன்னது போல் சௌந்தர்யா ப்ரொபோஸ் செய்தது பார்க்க நன்றாகத்தான் இருந்தது. Will you marry me என்ற ஒரு பரிசை கொடுக்கிறார். சவுண்டுக்கு வெட்கம் எல்லாம் பட தெரியுமா என ஆச்சரியமாகவும் உள்ளது. விஷ்ணுவும் அதனை ஏற்றுக்கொண்டு இதுகுறித்து பேசினார். போட்டியாளர்களெல்லாம் ஒரே ஷாக்கில் கை தட்டினார்கள். பிறகு இருவரும் சேர்ந்து நடனமாடுகிறார்கள். இருவரும் வெட்கப்பட்டு பேசியதை சில ரசிகர்கள் க்யூட் என்று கமெண்ட் செய்தாலும், சில ரசிகர்கள் இது என்ன பிக்பாஸ் வீடா இல்லை மேட்ரிமோனியா என கலாய்த்து வருகின்றனர். மேலும் ஓவர் க்ரிஞ்ச் என்றும், அனைத்தும் ஸ்க்ரிப்ட் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ஒவ்வொரு முறையும் எதாவது இதுபோல் நடக்கிறது என்பதால், எப்படிப் பார்த்தாலும் ஸ்க்ரிப்ட் என்றுதான் ரசிகர்களுக்கு தோன்றுகிறது.