‘மிஸ் இந்தியா 2022’: பட்டம் வென்றார் சைனி ஷெட்டி!

 ‘மிஸ் இந்தியா 2022’: பட்டம் வென்றார் சைனி ஷெட்டி!
Published on

இந்த ஆண்டுக்கான  'ஃபெமினா மிஸ் இந்தியா வோ்ல்டு 2022' பட்டத்திற்கான இறுதிச்சுற்றுப் போட்டி நேற்று ( ஜூலை 3)  மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில் பல மாநிலங்களிலிலிருந்து தேர்வான 31 மாடல் அழகிகள் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியின் இறுதியில் கர்நாடாகாவைச் சேர்ந்த சைனி ஷெட்டி என்ற 21 வயது மாடல், 'ஃபெமினா மிஸ் இந்தியா 2022′ பட்டத்தை தட்டிச்சென்றார்.

மேலும் முதல் ரன்னர்-அப்  வெற்றியாளராக ராஜஸ்தானை சேர்ந்த ரூபல் ஷெகாவத், இரண்டாம் ரன்னர்-அப்  வெற்றியாளராக உத்தரப்பிரதேசத்தின் ஷினாதா சவுகான் ஆகியோர் வெற்றி பெற்றனர்.இந்த 'மிஸ்.இந்தியா' போட்டியின் இறுதிச் சுற்றுக்கான நடுவர்களாக முன்னாள் 'மிஸ்.இந்தியா' வெற்றியாளர்களும் பாலிவுட் நடிகைகளுமான நேஹா தூபியா, மலாய்கா அரோரா ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் பாலிவுட் நடிகா் டினோ மோரியா, ஃபேஷன் டிசைனர் ரோகித் காந்தி, ராகுல் கன்னா, நடன இயக்குநா் ஷியாமக் தவாா், இந்திய மகளிா் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோா் இந்த அழகிப் போட்டி இறுதிச் சுற்றின் நடுவா்களாக செயல்பட்டனா்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com