சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் பிரபல சீரியல்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

சீரியல்
சீரியல்

பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் விரைவில் முடிவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீரியல்களுக்கு ஊர்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்களே சீரியல் பார்ப்பார்கள் என்று நம்மிடம் ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், கல்லூரி செல்லும் ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் சீரியல் பார்த்து வருகின்றனர்.

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு முன்னோடியாக திகழ்வது சன் டிவி. பகல், இரவு என முழு நாளும் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதில் பல சீரியல்கள் முடிவடைந்த பின்பு புதுபுது சீரியல்கள் ஒளிபரப்பப்படும்.

அப்படி ஒரு பிரபல சீரியல் தான் தற்போது முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரசிகர்களின் பேராதரவை பெற்ற அன்பே வா தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. இதற்கு பதிலாக விரைவில் சரிகமப தயாரிக்கும் 2 சீரியல்கள் சன் டிவியில் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் சன் டிவியில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இணையத்தில் கசிந்த தகவலால் ரசிகர்கள் சீரியல் நடிகர்களின் புகைப்படங்களை பகிர்ந்து மிஸ் யூ என பதிவிட்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com