விமர்சனம்: THE BIG FAKE (2026) - க்ரைம் ட்ராமா..!!
ரேட்டிங்(2.5 / 5)
THE BIG FAKE - 2026ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் தயாரிப்பாக நேரடியாக நெட் பிளிக்சில் 23/1/2026 முதல் வெளியான படம்.
1970 களில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்ட படம். ஆண்ட்டோனியோ டோனி சிச்சியாரெல்லி 1948ல் இத்தாலியில் பிறந்தான்.1970ல் இவன் சின்ன சின்ன க்ரைம்களில் ஈடுபட்டான். அவனது வாழ்க்கை சம்பவங்களிலிருந்து தொகுக்கப்பட்ட சம்பவங்கள் தான் இதன் திரைக்கதை.
ஸ்பாய்லர் அலெர்ட்:
நாயகன் மிகச்சிறந்த ஓவியன். பென்சில் டிராயிங்க், பெயிண்ட்டிங்க் உட்பட பல்வேறு ஓவியத்திறமைகள் கொண்டவன். இவன் வீடு முழுக்க ஓவியங்களாலும், பெயிண்ட்டிங் கலெக்சன்களாலும் நிரம்பி இருக்கும். ஆனால் இவ்வளவு திறமை இருந்தும் இவனது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வில்லையே என்ற மனக்குறை இவனுக்கு உண்டு.
நாயகி ஒரு ஆர்ட் கேலரி வைத்திருக்கிறாள். ஒரு முறை நாயகன் வீட்டுக்கு வருகிறாள். அவனது அசாத்தியமான ஓவியத்திறமை கண்டு வியக்கிறாள்.
ஒரு புகழ் பெற்ற ஓவியத்தைக் காட்டி இதே போல் போலியாக ஒரு ஓவியத்தை வரைந்து தர முடியுமா? எனக்கேட்கிறாள். குரு சிஷ்யன் படத்தில் ரஜினி காமெடியாக 'இதெல்லாம் ஒரு பூட்டா? ஜூ ஜூபி மேட்டர்' என்பாரே, அதே போல் நாயகன் அசால்ட் ஆக அச்சு அசலாக அந்த ஓவியத்தை வரைந்து தருகிறான்.
நாயகி பிரமித்து விடுகிறாள். லட்சக்கணக்கான ரூபாய் விலைக்கு அது சேல்ஸ் ஆகிறது. நாயகிக்கு அந்தப் பணத்தில் 30% கிடைக்கிறது. நாயகனுக்கு அவள் 10% தருகிறாள்.
பின் இதுவே வழக்கம் ஆகிறது. புகழ் பெற்ற ஓவியங்களின் மாதிரியை நாயகி தர, நாயகன் அவற்றை வரைய, இருவரும் செல்வத்தில் கொழிக்கிறார்கள்.
நாயகன் நாயகியிடம் 'நாம் திருமணம் செய்து கொள்வோமா?' எனக்கேட்கிறான். ஆனால் நாயகி, 'எனக்குக்காதல் , திருமணம் இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லை' என நாயகனின் காதலை நிராகரிக்கிறாள். ஆனாலும் இருவரும் நெருக்கமாகப் பழகுகின்றனர். நாயகி கர்ப்பம் ஆகிறார்.
இந்த மாதிரி வாழ்க்கை சுமூகமாகப் போய்க்கொண்டிருக்கும் போது, ஒரு கேங்க்ஸ்டர் கும்பல் நாயகனை அணுகுகிறது. போலியான டாகுமெண்ட்ஸ், போலி பாஸ்போர்ட் போன்றவை தயாரிக்க நாயகனின் உதவியை நாடுகிறது.
நாயகனின் போக்கு நாயகிக்குப் பிடிக்கவில்லை. நாயகனை விட்டுப்பிரிகிறாள்.
புது கேங்க்ஸ்டர் குழுவின் சகவாசத்துக்குப்பின் நாயகனின் நெருங்கிய நண்பன் கொலை செய்யப்படுகிறான். இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை.
நாயகன் ஆக பியட்ரோ காஸ்ட்டலிட்டோ பிரமாதமாக நடித்திருக்கிறார். அவரது கெட்டப்பும் , உடல் மொழியும் அருமை.
நாயகி ஆக ஜூலியா மைக்கேலினி அழகுப் பதுமையாக வருகிறார். பிரேக்கப் செய்து பிரியும் காட்சியில் சோக நடிப்பை வழங்கி இருக்கிறார்.
வில்லன்களாக, நண்பர்களாக நடித்த அனைவருமே அவரவர் பாத்திரங்களை சரியாக ஏற்று நடித்திருக்கிறார்கள்.
எமானுவேல் பாஸ்குட் தான் ஒளிப்பதிவு. அந்தக்கால கலர் டோனை சரியாக செட் செய்து இருக்கிறார். குட்ஸ்டெபனோ லோடோவிச்சி தான் இயக்கம்.
சபாஷ் டைரக்டர்
உண்மைக்கதை என்பதால் காட்சிகளில் ஒரு நம்பகத்தன்மை
க்ரைம் ட்ராமாவாக இருந்தாலும் நட்பு, காதல் செண்ட்டிமெண்ட் சீன்கள் நிறைத்து வைத்தது
ரசித்த வசனங்கள்
அன்பு தான் வலிமையான ஆயுதம்
புரளி என்பது பேய் மாதிரி. தரைல நிக்காம சுத்திக்கிட்டே இருந்தாதான் நம்புவாங்க
உன் கார் எங்கே?
காரா? என் கிட்டே சைக்கிள் தான் இருக்கு.
அப்போ திருட்டு பயம் இல்லை
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்
நாயகியுடன் உண்மையான காதலில் இருப்பதாக சொல்லும் நாயகன் இன்னொரு பெண்ணுடனும் நெருக்கமாக இருப்பது எப்படி?
நாயகன், நாயகி பிரிவுக்குப்பின் திரைக்கதை படுத்து விடுகிறது. நம்மைப்படுத்தி எடுக்கிறது
வில்லன் கும்பல் நாயகனைக் கொலை செய்ய வாய்ப்புக் கிடைத்தும் அவன் கைகளை மட்டும் தாக்கி ஓவியம் வரையாமல் செய்வது நம்ப முடியவில்லை. எதுக்கு இரக்கம் காட்டணும்?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+ (ஒரே ஒரு 18+ காட்சி இருக்கிறது)
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட்:
உண்மை சம்பவங்கள் கொண்ட க்ரைம் ட்ராமா. ரசிகர்கள் பார்க்கலாம்.

