சர்ச்சைகளை தாண்டி ஓடிடியில் வரும் தி கேரள ஸ்டோரி.. எப்போது தெரியுமா?

தி கேரள ஸ்டோரி
தி கேரள ஸ்டோரி

பல சர்ச்சைகளை தாண்டி அதா ஷர்மாவின் தி கேரளா ஸ்டோரி விரைவில் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிதப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி வெளியான திரைப்படம் "தி கேரளா ஸ்டோரி". இந்தியில் உருவான இந்தத் திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்கில் வெளியானது. இந்த திரைப்படத்தின் டீசர் வெளியான முதலே மக்களிடையே பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி மத வெறுப்பை தூண்டும் வகையில் இந்த திரைப்படம் இருப்பதாக கூறப்பட்டது.

தமிழகத்தில் இந்த திரைப்படத்திற்கு தொடர் எதிர்ப்பு அதிகரிக்க, மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தானாக முன்வந்து "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தன. தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் The Kerala Story திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என இருவிதமான வரவேற்பை பெற்றது.

மேலும் மேற்கு வங்கத்தில் இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது மட்டுமின்றி, தமிழகத்திலும் மூன்றே நாட்களில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் இருந்து வாஷ் அவுட் ஆனது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே, ஒரு பக்கம் சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும், மற்றொருபுறம், பாக்ஸ் ஆபிஸில் வசூலில் வேட்டையாடி வந்தது.

இந்நிலையில் தற்போது திரைப்படம் வெளியாகி ஓர் ஆண்டு காலம் முடிவடைந்துள்ள நிலையில் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற பிப்ரவரி 16 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com