சுவாரசியம் மிகுந்த திகில் மற்றும் மர்மம் நிறைந்த 90ஸ் ஃபேண்டஸி திரைப்படங்கள் – ஓடிடியில் கண்டுகளியுங்கள்..!

mummy ott
mummy ott
Published on

90- களின் காலகட்டத்தில் மக்களின் மனதில் நீங்காத இடம்பெற்ற, ஹாலிவுட்டின் புகழ்பெற்ற மர்மமும் திகிலும் நிறைந்த இரு திரைப்படங்களின் ஓடிடி தகவலைப் பற்றி இங்கு பார்ப்போம். இவை ரசிகர்களை அதிகம் பயமுறுத்தாமல் , அதே நேரத்தில் வரலாறு, கலாச்சாரம் மற்றும் அதன் பின்னணியில் ஒளிந்துள்ள மர்மங்களை வெளிப்படுத்தும், சுவாரசியம் மிகுந்த திரைப்படங்களாக இருக்கின்றன.1999 இல் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்திற்கு இந்தியாவிலும் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த திரைப்படங்கள் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பெரிதும் ஈர்ப்புடைவதாக இருக்கும். 

1.தி மம்மி(1999)  – அமேசான் பிரைம் / ZEE5: 

நடிகர்கள் : பிரெண்டன் ஃப்ரேசர் , ரேச்சல் வைஸ் , ஜான் ஹன்னா , அர்னால்ட்  ஓஸ்லோ ஆகியோர் நடித்துள்ளனர்.

திரைக்கதை: எகிப்தின் புராதன காலத்தில் பாரோ மன்னனின் காதலி அன் சுனா மூன் அவருக்கு தெரியாமல் , தலைமை பூசாரியை இம்ஹோடேப்பை காதலிக்கிறாள். இந்த விஷயம் பாரோவுக்கு தெரிய வர , அவரை இருவரும் சேர்ந்து கொலை செய்து விடுகின்றனர். இந்த கொலையை கண்ட பாரோவின் மெய்காப்பாளர்கள் முன்னால், அன் சுனா மூன் தற்கொலை செய்து கொள்கிறாள். அவளது சடலத்தினை கொண்டு  இறந்தவளை உயிர்ப்பிக்கும் போது பாரோவின் மெய்காவலர்கள் மீண்டும் வந்து தடுத்து விடுகின்றனர். இம்ஹோடேப் மற்றும் அவனது சீடர்களின் உறுப்புக்களை பிடுங்கி, உயிருடன் புதைத்து சாபமிடுகிறார்கள் 

20 ஆம் நூற்றாண்டில் , எகிப்து பிரமிடுகளை ஆராய வரும் நாயகி ஈவ்லின் ( ரேச்சல் வெய்ஸ்) மற்றும் அவளது சகோதரன் ஜொனாதன் ஆகியோர் , கைதியாக இருந்த நாயகன் ரிக் ஓ கானல்லை(பிராண்டன்)  தங்களின் பிரமிடுகளை ஆராயும் பணிக்கு உதவ மீட்கின்றனர்.இன்னொரு குழுவிடம் இருந்த ஒரு மர்ம புத்தகத்தை ரிக் திருடி தன் காதலியாக மாறிக் கொண்டு வரும் ஈவ்லினுக்கு கொடுக்கிறான். 

ஈவ்லின் அந்த புத்தகத்தை படிக்க படிக்க இறந்த போன இம்ஹோடேப் உயிருடன் வருகிறான் , தன் காதலியை உயிர்பிக்க ஈவ்லின் உடலை பயன்படுத்த நினைக்கிறான். இதன் பின்னர் என்ன ஆகும் என்பது தான் சுவாரசியம் மிகுந்த கதை. இந்த திரைப்படத்திற்கு ஜெர்ரி கோல்ட் ஸ்மித் இசையத்துள்ளார் , ஸ்டீபன் சோமர்ஸ் இயக்கியுள்ளார். 

ஓடிடி தளங்கள்: இந்த திரைப்படம் பல மொழிகளில் அமேசான் பிரைமில் உள்ளது , தமிழில் ZEE5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.


2. மம்மி ரிட்டர்ன்ஸ்(2001)- அமேசான் பிரைம்/ ZEE5:

முதல் பாகத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து எடுக்கப்பட்ட , அதன் தொடர்ச்சியான இரண்டாவது பாகம் இது. இதுவும் சற்றும் சுவாரசியம் குறையாமல் எடுக்கப்பட்டு பெரிய வெற்றியை பெற்றது.

நடிகர்கள்: அதே நடிகர்கள் , சிறப்புத் தோற்றத்தில் 'தி ராக் ’ டுவைன் ஜான்சன்

திரைக்கதை: கிமு 3000 ஆண்டில்,  ஸ்கார்ப்பியன் கிங் என்னும் மன்னன் உலகை வெல்ல படையெடுத்து தோல்வி அடைகிறான். அவன் இறக்கும் தருவாயில் அனுபிஸ் கடவுளுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறான். அனுபிஸ் படையை பெற்ற ஸ்கார்பியன் கிங் உலகை வென்று விட்டு, ஒப்பந்தப்படி தன் படையுடன் பாதாள உலகத்திற்கு சென்று விடுகிறான்.

லண்டனில் வாழும் ரிக் ஓ கானல் , ஈவ்லின் அவர்களது மகன் அலெக்ஸ் ஆகியோர் அனுபிஸ் கடவுளின் கை காப்பினை கண்டு பிடிக்கின்றனர். அலெக்ஸ் விளையாட்டுத்தனமாக அதை கையாள, மீண்டும் இம்ஹோடேப் உயிர் பெற்று வந்து ஈவ்லினை கடத்தி செல்கிறான். அன் சுனா முனை மீண்டும் உயிர்பிக்கிறான். ஈவ்லின்  தனது முற்பிறவியில் , தான் எகிப்து இளவரசி நெப்ரிடி என்பதையும் , அன் சுனா முன் அவள் மீது பொறாமை கொள்ளும் அரசனது காதலியாக இருந்ததையும் அறிகிறாள். 

தற்போதைய பிறவியில் ஈவ்லினை 

அன் சுனா முன் , இம்ஹோடேப் இணைந்து கொன்று விடுகின்றனர். அவளை மறுபடியும் உயிர் பித்தார்களா? அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தான் திகிலும் மர்மமும் நிறைந்த கதை. 

ஓடிடி தளங்கள்: இந்த திரைப்படம் பல மொழிகளில் அமேசான் பிரைமில் உள்ளது , தமிழில் ZEE5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com