OTT Update | இந்த வாரம் செம என்டர்டைன்மென்ட் காத்திருக்கு... ஓ.டி.டி-யில் 2 தரமான படங்கள்..!

Idli kadai lokah ott
Idli kadai lokah
Published on

என்னதான் திரையரங்குகளில் படம் பார்த்தாலும் வீட்டில் படம் பார்ப்பதற்கென்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதுவும் கொரோனா காலத்திற்கு பிறகே இந்த ஒடிடியின் ஆதிக்கம் அதிகரித்தது. திரையரங்குகளில் சென்று படம் பார்த்தவர்களுமே ஓடிடியில் படம் பார்க்க காத்து கொண்டிருக்கிறார்கள். தியேட்டரில் ஒரு முறை பார்த்த படத்தை மீண்டும் பார்க்க மறுபடியும் டிக்கெட் எடுக்க வேண்டும். ஆனால் ஒரு முறை ஓடிடியில் வந்தால் எப்போது வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம் என்ற வசதி இருக்கிறது.

தற்போதைய டிஜிட்டல் காலத்தில் 60 சதவீத வீடுகளில் ஒடிடி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வீடுகளில் அல்லாத நபர்கள் மொபைல் போன்களில் கூட படங்களை பார்க்கிறார்கள். அப்படி திரையரங்கில் வெற்றி கண்ட தனுஷின் இட்லி கடை படமும், ரத்தக்காட்டேரி கதையில் மிரட்டிய லோகா திரைப்படமும் எப்போது ஒடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். அதன் மாஸான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷின் 52வது படமாக வெளியான படம் தான் இட்லி கடை. மேலும் இப்படத்தில், ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டான் பிக்சர் தயாரித்துள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 29ஆம் தேதி வெளியாக உள்ளதாக நெட்பிளிக்ஸ் தளம் அறிவித்துள்ளது.

அதே போல், வித்தியாசமான த்ரில்லர் படமாக வெளியான படம் தான் லோகா. திரையரங்கில் வெற்றிகண்ட இந்த படத்தில், நடன இயக்குநர் சாண்டி, வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இயக்குனர் டொமினிக் அருண் இயக்கத்தில் நஸ்லேன் - கல்யாணி பிரியதர்ஷன் பெண் ஹீரோவாக சூப்பராக நடித்திருப்பார். ஓணம் பண்டிகையை ஒட்டி வெளியான இந்த திரைப்படம், உலகம் முழுவதும் ’பாக்ஸ் ஆஃபிஸ்’ ஹிட் அடித்தது. இந்த திரைப்படம், வரும் 31ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

இந்த 2 திரைப்படங்களையும் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த வாரம் டபுள் டமாக்காவாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com