சிங்கப்பூர் சலூன்
சிங்கப்பூர் சலூன்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

ஒவ்வொரு வார இறுதியிலும் ஓடிடி ரிலீசாக பல படங்கள் வெளியாகி ரசிகர்கள் இடையில் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் படத்தின் லிஸ்ட்டை பார்க்கலாம்.

என்னதான் தியேட்டர்கள் இருந்தாலும் கொரோனாவுக்கு பிறகு ஓடிடியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் மையத்திற்கு மாற, அனைவரும் வீட்டில் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் வைத்திருக்கிறார்கள். தியேட்டரில் படம் பார்த்தாலும் கூட ஓடிடி ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த வாரம் (பிப்ரவரி 23)ஆம் தேதி பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஆர்.ஜே .பாலாஜி நடிப்பில் வெளியாகி ஹிட்டான 'சிங்கப்பூர் சலூன்' இந்தவாரம் ஓடிடியில் வெளியாகிறது. இதை தவிர மற்ற மொழிகளின் படமும் ரிலீசாகிறது.

தமிழ் – சிங்கப்பூர் சலூன் ( அமேசான் பிரைம்/டென்ட்கோட்டா)

ஆங்கிலம்

1.CanITellYouASecret- (நெட்ஃபிளிக்ஸ்)

2. MeaCulpa – (நெட்ஃபிளிக்ஸ்)

3. SawX – ( Lionsgate Play)

மலையாளம் - மலைக்கோட்டை வாலிபன் (ஹாட்ஸ்டார்)

தெலுங்கு

1. பாமகலாபம் 2 (ஆஹா தமிழ்)

ஹிந்தி

1. போச்சேர் (பிரைம் தொடர்)

2.The Indrani Mukerjea Story (நெட்ஃபிளிக்ஸ்)

கன்னடம் - School Days (நெட்ஃபிளிக்ஸ்)

சில நாட்கள் ஒடிடியில் படமே வெளியாகாமல் வறட்சியாக காணப்படும். ஆனால், இந்த வாரம் இத்தனை படங்கள் ரிலீசாவதால், ஒடிடி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com