
இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாகும் என்ற பட்டியலை பார்க்கலாம்.
கொரோனா காலத்திற்கு பிறகு தான் ஒடிடியின் ஆதிக்கம் அதிகமானது. திரையரங்கில் கூட ஒரு முறை தான் படத்தை பார்க்க முடியும். ஆனால் ஒடிடி தளத்தில் தோன்றும் நேரத்தில் எல்லாம் படத்தை பார்க்கலாம். இதனால் மட்டுமல்ல, ரிலாக்ஸாக வீட்டில் தியேட்டர் செட்டப்பில் கூச்சலின்றி படம் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். சூழ்நிலை காரணமாக சிலர் தியேட்டர்களில் படம் பார்க்க முடியவில்லை என்றால் முந்தைய காலங்களில் அது டிவியில் போடும் வரை காத்திருக்க வேண்டும். இல்லையேல் சிடி வாங்க வேண்டும்.
ஆனால் தற்போது படங்கள் வெளியான சில மாதங்களிலேயே ஒடிடி தளங்களில் விடப்படுகிறது. அதிலும் குறிப்பாக சில படங்கள் நேரடியாகவே ஒடிடி தளத்தில் வெளியாகின்றன. அந்தளவிற்கு ஒடிடிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது. அந்த வகையில் இந்த வார எந்த ஒடிடி தளத்தில் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்று பார்க்கலாம்.
கடந்த வாரம் வெளியான விடுதலை 2 ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதே போன்று தீபாவளி சமயத்தில் கங்குவா திரைப்படமும் ஒடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. தியேட்டரில் சொதப்பிய இந்த படத்தை ஒடிடி தளம் புரட்டி போட்டு வெற்றியை கொடுத்தது.
வார இறுதி நாட்களில் ஒடிடி தளங்களில் புதுப்புது படங்கள் வெளியாகும். அந்த வகையில் இந்த வார இறுதியில் என்னென்ன படங்கள் வெளியாகவுள்ளன தெரியுமா?
புஷ்பா 2 - அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் கூடுதலான 20 நிமிட காட்சிகளுடன் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே புஷ்பா 1 படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றநிலையில் இந்த பாகமும் பெரிய வெற்றியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஐடென்டிட்டி: டோவினோ தாமஸ், த்ரிஷா நடித்துள்ள ‘ஐடென்டிட்டி’ மலையாள படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது.
எமக்குத் தொழில் ரொமான்ஸ்: அசோக் செல்வன் நடித்துள்ள ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ திரைப்படம் ஆஹா ஓடிடியில் ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
மேக்ஸ்: கிச்சா சுதீப் நடித்துள்ள ‘மேக்ஸ்’ கன்னட படம் ஜீ5 ஓடிடியில் நாளை வெளியாகலாம் என கூறப்படுகிறது. படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் பார்க்க முடியும்.
பயாஸ்கோப்: சங்ககிரி ராஜ்குமார் இயக்கியுள்ள ‘பயாஸ்கோப்’ திரைப்படம் ஆஹா ஓடிடியில் நாளை வெளியாகவுள்ளது.