டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்த பிரபல சீரியல்.. பின்னுக்கு சென்ற பாக்கியலட்சுமி!

சீரியல்
சீரியல்

சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் டி.ஆர்.பி பட்டியலில் முன்னணி இடங்களைப் பிடித்து வருகின்றன. இந்த வாரம் முதல் டாப் 5 இடங்களையும் சன் டிவி சீரியல்களே பிடித்துள்ளதால் விஜய் டிவி அதிர்ச்சியடைந்துள்ளது.

சீரியல்களுக்கு ஊர்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்களே சீரியல் பார்ப்பார்கள் என்று நம்மிடம் ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், கல்லூரி செல்லும் ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் சீரியல் பார்த்து வருகின்றனர். அப்படி எந்த சீரியல் முன்னணி வகிக்கின்றது என்று பார்க்கலாம்.

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு முன்னோடியாக திகழ்வது சன் டிவி. இதில் ஒளிபரப்பான பல சீரியல்கள் தற்போது மற்ற சேனல்களில் மறு ஒளிபரப்பாகி வருகின்றன.

மெட்டிஒலி, திருமதி செல்வம், சித்தி, கோலங்கள், ஆனந்தம், அண்ணாமலை என சன் டிவி-யின் பல சீரியல்கள் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வகையில் தற்போதும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள பல மெகாஹிட் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது சன் டிவி.

முக்கியமாக சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் டி.ஆர்.பி பட்டியலில் முன்னணி இடங்களைப் பிடித்து வருகின்றன. இதன்மூலம் பார்வையாளர்கள் மத்தியில் அந்த சேனலின் சீரியல்களுக்கு உள்ள வரவேற்பைப் பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.

இந்நிலையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து கயல், வானத்தை போல, எதிர்நீச்சல், சுந்தரி ஆகிய 4 சீரியல்களும் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளது. இந்த 5 இடங்களிலுமே சன் டிவி சீரியல்கள் தான் இடம்பெற்றுள்ளது. 6வது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசையும், தொடர்ந்து 7வது இடத்தில் சன் டிவி இனியா சீரியலும், டாப் இடத்தில் இருந்து வந்த பாக்கியலட்சுமி சீரியல் 8வது இடத்திற்கும் சென்று பின் தங்கியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com