வெட்டி நடை போடுகிறவர் யார்? கண்கலங்கிய பூர்ணிமா? கமல் கொடுத்த நச் பதில்!

பூர்ணிமா
பூர்ணிமா

பிக்பாஸ் 7வது சீசன் தொடங்கி 49வது நாள் சென்று கொண்டிருக்கும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் அனைவருக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார். ரசிகர்களும் அதை நன்றாக ரசித்து வருகின்றனர்.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 7வது சீசன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த வாரத்திற்கு முதல் வாரம் சமூக வலைதள பக்கம் சென்றாலே பிக்பாஸ் என்றுதான் வரும். அந்த அளவிற்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது பிரதீப் சம்பவம். பெண்கள் பாதுகாப்பு என்று கூறி பலராலும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிரதீப் வெளியேற்றப்பட்டார்.இதற்கு பொதுமக்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். தொடர்ந்து கடந்த வாரம் மாயா கேப்டன்சியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது.

இந்த 2 பிரச்சனைகளுக்கும் சேர்த்து கமல்ஹாசன் கடந்த வார இறுதியில் அனைவரையும் வெளுத்து வாங்கினார். இந்த நிலையில் இந்த வாரம் கேப்டனாக தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சூப்பர் கேப்டன்சி என்ற அளவிற்கு நல்ல பெயரை வாங்கினார்.

ஆனால் மாயாவின் சூழ்ச்சியால் பிக்பாஸ் ஹவுஸில் பல பிரச்சனைகள் எழுந்து வந்தது. இந்த நிலையில் இன்று கானா பாலா எலிமினேட் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வைல்டு கார்டு மூலம் எண்ட்ரி ஆன குறைந்த நாட்களிலேயே அன்ன பாரதி வெளியான நிலையில், மேலும் ஒரு வைல்டு கார்டு கண்டஸ்டெண்ட் எலிமினேட் செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று வெளியான புரோமோவில், மாயாவை வெட்டி நடைபோடுபவராக ரவீனா தேர்ந்தெடுக்க, பூர்ணிமாவை வெட்டி நடை போடுபவராக அர்ச்சனா தேர்தெடுத்து விளக்கமளித்தனர். அடுத்து வந்த பூர்ணிமா விக்ரமை வெற்றிநடை போடுபவர் என்றும் அர்ச்சனாவை வெட்டி நடை போடுபவர் என்றும் போர்டை எடுத்து வைத்து விளக்கம் கொடுக்கும் போது " இந்த கேம்-அ எப்படி பாக்குறாங்கனு புரிஞ்சுக்க முடில” என்று கூறும் போதே அழுகையை அடைக்க பேச முடில தண்ணி குடிக்கணும் பிளாக் ஆகுது என்று கூறினார்.

அந்த பிளாக்க எடுக்கணும் உங்களால எடுக்க முடியலைன்னா சொல்லுங்க, எடுத்து விடுறேன் என்று கூறுகிற பூர்ணிமா அமைதியாக நிற்கிறார். இன்றைய எபிசோட் சுவாரசியங்கள் நிறைந்து இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com