நடிகர் மாரிமுத்துவுக்கு பதில் அடுத்த ஆதி குணசேகரன் வரப்போகிறது குறித்து புரோமோ வெளியாகியுள்ளது.
2022 பிப்ரவரி மாதம் முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் சத்யப்ரியா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மதுமிதா, கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சமூக செயற்பாட்டாளராக ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் திருச்செல்வம் நடித்து வருகிறார்.
கோலங்கள் சீரியலுக்குப் பிறகு இயக்குநர் திருச்செல்வம் மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார். ஆணாதிக்கம் மிக்க அண்ணன் - தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப்படுத்துகிறார்கள் என்பதும், அதை அந்தப் பெண்கள் எதிர்கொண்டு எவ்வாறு மீண்டெழுகிறார்கள் என்பதே எதிர்நீச்சல் சீரியலின் கதைகளம்.
இந்த சீரியலை பலரும் பார்ப்பதே ஆதி குணசேகரின் அட்டகாசமான நடிப்பு தான். ஆனால் அவர் டப்பிங் பணியின் போது கடந்த 2 வாரம் முன்பு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் ஒட்டு மொத்த தமிழகத்தையுமே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இவருக்கு பதில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற பேச்சு எழுந்து வரும் நிலையில், அடுத்த அப்டேட் வந்துள்ளது. தனது கணீர் குரலால் பலரையும் திரும்பி பார்க்க வைத்த மாரிமுத்து, இதுவரை இல்லாத அளவிற்கு புகழ் உச்சத்தை அடைந்தார். இதன் மூலம் அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது.
ஆனால் எதிர்பாராத விதமாக அவர் ரசிகர்களை சோக கண்ணீரில் மூழ்கடித்து சென்றுவிட்டார். இதுவரை எதிர்நீச்சல் சீரியலில் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி வந்த நிலையில், நேற்று அவர் லெட்டர் எழுதி வைத்து விட்டு காணாமல் போனதாக காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து இன்றைய எபிசோடுக்கான புரோமோவில் ஆதிகுணசேகரன் முன்ன மாதிரியில்லை, வரப்போகும் குணசேகரன் ரொம்ப ஆபத்தானவன் என அப்பாத்தா கூற அனைவரும் கதி கலங்கி நிற்கின்றனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இதன் மூலம் இன்று மாரிமுத்துவிற்கு பதில் வேறு யாரோ வரப்போகிறார் என ரசிகர்கள் உறுதி செய்துள்ளனர். ஆனால் அது இன்றைய எபிசோட்டிலேயே பார்க்க முடியும்.