பிரசாந்தின் உண்மை முகத்தை அறிந்த மீனா.. கணவரை காப்பாற்றுவாரா?

பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ்

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தக் குடும்பத்தின் நான்கு சகோதரர்களுக்கும் திருமணமாகி விறுவிறுப்பாக கதைக்களம் நகர்ந்து கொண்டிருந்த நிலையில், அந்தக் குடும்பத்தின் மூன்று மருமகள்களும் குழந்தைப் பெற்று உள்ளனர்.

இந்த சீரியலில் வரிசையாக ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டு விடும் அதை சரிசெய்வதையே வழக்கமான கதைகளம் நகர்ந்து கொண்டிருக்கிறது. எதாவது சண்டை வந்தால் 4 பேரில் ஒருவர் தனியாக சென்றுவிடுவார். பின்பு அவர்கள் மீண்டும் வந்த இணைவர் இது போன்று கதை சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், மகிழ்ச்சியாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்குள் திடீரென வந்த பூகம்பம். ஜனார்த்தனன் தனது 2வது மருமகனான பிரசாந்தை நம்பி அவருக்கு வேண்டிய பணத்தை கொடுத்து வந்தார். பின்பு பிரசாந்த் ஏமாற்றுவதை உணர்ந்த அவர், பிரசாந்திடம் பணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் பிரசாந்த் மாமனார் என்றும் பாராமல் கத்தியால் குத்திவிடுவார்.

இதில் படுகாயமடைந்த ஜனார்த்தனன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது ஒரு புறம் இருக்க பிரசாந்த் தன்னை தானே காயப்படுத்தி கொண்டு பழியை மீனாவின் கணவரான ஜீவா மீது போட்டுவிடுவார். ஜீவாவும், கதிரும் ஜெயிலில் தவித்து வர, பிரசாந்த் எப்படியாவது உயிருக்கு போராடும் ஜனார்த்தனை முழுவதுமாக கொல்ல திட்டம் தீட்டி வருகிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா ஒளிந்திருந்து பிரசாந்த் பேசுவதை கேட்கிறார். அப்போது பிரசாந்த் மாமனாரை வெட்டிய கதை முழுவதுமாக கூறி மீண்டும் கொலை செய்ய முயற்சிக்கிறார். அப்போது மருத்துவ ஊழியர் வரவே அங்கிருந்து செல்கிறார். உண்மையை அறிந்த மீனா அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com