கையில் குழந்தையுடன் விஜய் டிவி பிரியங்கா!

கையில் குழந்தையுடன் விஜய் டிவி பிரியங்கா!

விஜய் டிவி ஆங்கரான பிரியங்கா தேஷ்பாண்டே தங்கள் குடும்பத்தின் புதுவரவான சின்னஞ்சிறு குழந்தையுடன் காட்சியளிக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது. 

விஜய் டிவி-யின் முன்னணி தொகுப்பாளினியான ப்ரியங்கா தேஷ்பாண்டே, அந்த சேனலில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், பிபி ஜோடிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 

மேலும் தன் சொந்த யூடியூப் சேனலில் பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் தன் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவையும் பகிர்ந்திருந்தார். இதில் பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கேற்ற பாவனி, அமீர் உள்ளிட்டோரும் உடனிருந்தார்கள். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா போட்டியாளராக கலந்துகொண்டு, 2-ம் இடம் பிடித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் தன் தம்பி ரோகித்தின் மனைவி கர்ப்பமாக இருப்பதை ப்ரியங்கா சில நாட்களுக்கு முன்பு புகைப்படம் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ப்ரியங்காவின் தம்பிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள விஷயத்தை பிரியங்கா பகிர்ந்துள்ளார். 

தன் தம்பிக் குழந்தையை கையில் வைத்து பிரியங்கா கொஞ்சும் புகைப்படம் வைரலாகியுள்ளது. மேலும் ப்ரியங்கா அத்தை பதவிக்கு பிரமோஷன் ஆனதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com