

கார்த்தி நடிப்பில் வெளியான 'வா வாத்தியார்' படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.
கடந்தாண்டே வெளியாக வேண்டிய இப்படம் தயாரிப்பாளர் சந்தித்த நிதி வழக்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பொங்கல் வெளியீடாக வெளியானது. ஜனநாயகன் திட்டமிட்டபடி வெளியாகாததால் கார்த்தியின் வா வாத்தியார் அந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு கடந்த ஜனவரி 14ஆம் தேதி வெளியானது. நலன் குமாரசாமி இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் இப்பொழுது ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி அமேசான் பிரைம் வீடியோவில் நாளை (ஜனவரி 28)அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் ஸ்டிரீமிங் ஆக உள்ளது.
சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் வா வாத்தியார். ரூபாய் 40 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூபாய் 10 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. இப்படத்தில் கார்த்தி எம்ஜிஆரின் தீவிர ரசிகராகவும், எம்ஜிஆரின் கொள்கைகளை பின்பற்றும் ஒரு போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார்.
கார்த்தியின் 26வது படமான 'வா வாத்தியார்' திரைப்படம் 14 நாட்களில் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ராஜ்கிரண், ஆனந்தராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக் மற்றும் பி.எல்.தேனப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் பேனரின் கீழ் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் இந்த வார இறுதியில் நிவின் பாலியின் 'சர்வம் மாயா' ஜனவரி 30ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரிலும், பிரதீப் ரங்கநாதன் நடித்த திரைப்படமான டிராகன் நெட்ஃபிக்ஸிலும், தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் அமேசான் பிரைமிலும், சன் NXT இல் ஜெய், யோகிபாபு நடித்த பேபி அண்ட் பேபி திரைப்படமும் வெளியாக உள்ளது.