விஜய் டிவி நாஞ்சில் விஜயனுக்கு டும் டும்.. பொண்ணு யாரு தெரியுமா?

நாஞ்சில் விஜயன்
நாஞ்சில் விஜயன்Vijay Kumar

பிரபல சின்னத்திரை காமெடி நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரியாலிட்டி ஷோக்களில் நகைச்சுவை கலைஞராக தனது வாழ்க்கையை துவங்கிய நாஞ்சில் விஜயன், பிறகு சின்னத்திரை தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார். லேடி கெட்டப்பில் கலக்கும் இவர், படிப்படியாக தனது நகைச்சுவையால் உயர்ந்து வருகிறார். இவரது படங்கள் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நடிப்பில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளார்.

வீட்டில் தனது அண்ணன், தம்பி, தங்கை ஆகியோருக்கு திருமணம் செய்து வைத்து தனது கடமைகளை நிறைவாக முடித்துள்ள நாஞ்சில் விஜயன் தற்போது திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

தனது நண்பர்கள் மூலம் அறிமுகமான மரியா என்ற பெண்ணுடன் நாஞ்சில் விஜயனுக்கு இருகுடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்த வீடியோவை நாஞ்சில் விஜயன் வெளியிட்டிருந்த நிலையில் நேற்று திருமணம் முடிந்தது.

இவர்களுடைய திருமணம் சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது. நாஞ்சில் விஜயனுக்கு வெள்ளித்திரைக்கு மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com