தனத்திற்கு பிரஸ்ட் கேன்சர்.. உண்மையை அறிந்த மூர்த்தி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ்விஜி

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தக் குடும்பத்தின் நான்கு சகோதரர்களுக்கும் திருமணமாகி விறுவிறுப்பாக கதைக்களம் நகர்ந்து கொண்டிருந்த நிலையில், அந்தக் குடும்பத்தின் மூன்று மருமகள்களும் குழந்தைப் பெற்று உள்ளனர்.

அந்தக் குடும்பத்தின் மூத்த மருமகள் தனத்துக்கு திடீரென மார்பகப் புற்றுநோய் வந்தது. இதையடுத்து, மற்ற மூன்று மருமகள்களும் ஒன்றாக சேர்ந்து கூட்டுத் திட்டம் போட்டு திருச்சிக்கு அழைத்துச் சென்று தனத்துக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இந்த விஷயம் தற்போது கதிருக்கு மட்டும் தெரிய வந்துள்ளது. மீதமுள்ள மற்ற நபர்களுக்கும் தெரியவரும்போது என்ன ஆகும் என்ற பரபரப்பில் இந்தக் கதை களம் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த கதை முக்கிய கட்டத்திற்கு வந்துள்ளது.

அதாவது தனத்திற்கு கேன்சர் இருப்பதை தெரிந்து கொண்ட ஐஸ்வர்யா வழக்கம் போல் அதை வீடியோவில் தெரிவித்துவிட்டார். இந்த வீட்டில் ஒருவருக்கு கேன்சர் என்று அவர் கூறியதை தொடர்ந்து அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஒன்றாக சேர்ந்து விட்டனர் யாருக்கு கேன்சர் என்று. அனைவரும் ஐஸ்வர்யாவை மாறி மாறி திட்ட பொங்கி எழுந்த ஐஸ்வர்யா தனம் அக்காவிற்கு தான் கேன்சர் என தெரிவித்துவிட்டார். இதனை கேட்டு மூர்த்தி ஷாக்கில் உறைந்தார். இது தான் இன்றைய எபிசோட், இனி திங்கட்கிழமை தான் அடுத்து என்ன நடக்கும் என தெரியவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com