விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வேலைப் பார்க்கும் பிரியங்காவிற்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். கடைசியாக குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அதில் மணிமேகலைக்கும் இவருக்கும் இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. இதனால் பலரும் பிரியங்கா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை பிரியங்கா திருமணம் செய்து கொண்டார். பின்னர், 2022 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்ததாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், இது குறித்து பிரியங்கா அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
தொகுப்பாளர் அர்ச்சனா, சில விஷயங்களை பேசும் போது, இதுகுறித்து பேசினார். “உன் வாழ்வில் வரும் ஒருவன், கண்டிப்பாக உன்னை முழுமையாக காதலித்து, உனக்கு நிறைய குழந்தை செல்வங்களை கொடுக்க வேண்டும்.” என்று அர்ச்சனா அவரை வாழ்த்தினார். இதனால், பிரியங்கா அவரது கணவரை விட்டு பிரிந்ததை ரசிகர்கள் அனைவரும் உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள திருமண வீடியோவில் பிரியங்கா மணப்பெண் அலங்காரத்தில் இருப்பது போன்றும், மணமகன் அருகில் இருப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் அவர் பிரியங்காவிற்கு தாலி கட்டுவது போன்ற காட்சியும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதால், ரசிகர்கள் பலரும் பிரியங்காவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது உண்மையா அல்லது வதந்தியா என்பது குறித்து பிரியங்கா தரப்பில் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது இது குறித்து உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
பிரியங்காவின் ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த வீடியோ குறித்த உண்மை நிலை என்னவென்று அறிய ஆவலுடன் உள்ளனர்.