விஜய் டிவியால் அதிரடியாக வெளியேற்றப்பட்ட கோமாளி ! அவருக்கு பதில் இவரா?

விஜய்  டிவியால் அதிரடியாக வெளியேற்றப்பட்ட கோமாளி !  அவருக்கு பதில் இவரா?

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பேராதரவை பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் தற்பொழுது இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்ப தொடங்கிவிட்டனர். இந்நிலையில் கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசன் பல புதிய கோமாளிகள் கலந்து கொண்டிருக்கின்றனர்.ஏனெற்றால் கடந்த குக் வித் கோமாளி சீசன் 3 மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்ததை அடுத்து அதில் இருந்த புகழ், KPY பாலா, சிவாங்கி போன்றவர்கள் புகழ், வாய்ப்பு கிடைத்துதிரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருவதினால் அவர்களுக்கு பதிலாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், சின்னத்திரை நடிகையான ரவீனா தாகா, சுனிதா, மோனிஷா, மணிமேகலை உள்ளிட்டோர் கோமாளிகளாக கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கியது.

இதுவரை கோமாளியாக பங்கேற்று வந்த சிவாங்கி இந்த முறை குக்காக என்ட்ரி கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் புதிய கோமாளிகளாக சிங்கப்பூர் தீபன், சில்மிஷம் சிவா, ஓட்டேரி சிவா உள்ளிட்டோர் கோமாளிகளாக களத்தில் இறங்கி உள்ளனர்.

ஆனால் ஒரே வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து ஓட்டேரி சிவாவை விஜய் டிவிநீக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. அதற்குக் காரணம் அவருடைய குடிபோதை தான் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து குடிபோதையில் இருக்கும் ஓட்டேரி சிவாசூட்டிங் ஸ்பாட்டிலும் கட்டுப்படுத்துவது கஷ்டமான விஷயமாக இருப்பதால் அவரைதூக்கிவிட்டு அவருக்கு பதிலாக தங்கதுரையை விஜய் டிவி களம் இறக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த வார எபிசோடில் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com