சின்னத்திரை ஜோடிகளான சீரியல் நடிகர்-நடிகை.. யார் தெரியுமா?

prem jacob marriage
prem jacob marriage

சீரியல் நடிகர், நடிகைகள் பலர் திருமணம் செய்து சின்னத்திரை ஜோடியாக கலக்கி வருகின்றனர். ஒரே சீரியலில் ஹீரோ, ஹீரோயினாக நடித்து ரியல் ஹீரோ, ஹீரோயினான தம்பதிகள் தான் சரவணன் மீனாட்சி சீரியல் செந்தில் - ஸ்ரீஜா, ராஜா ராணி சீரியல் சஞ்சீவ் - ஆலியா மானசா.

இப்படி இருக்கையில் இது போன்று ஏராளமானோர் சீரியல் டூ சீரியல் காதலித்து திருமணம் செய்கின்றனர். அப்படி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் நீ நான் காதல் சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் பிரேம் ஜேக்கப் பிரபல சீரியல் நடிகையை திருமணம் செய்துள்ளார்.

விஜய் டிவியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23-ந் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல், நீ நான் காதல். வர்ஷினி சுரேஷ், சசி காயத்ரி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், பிரேம் ஜேக்கப் என்பவர் நாயகனாக நடித்து வருகிறார். மலையாள சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், இந்த சீரியல் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது தனது திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், சீரியல் நடிகையான ஸ்வாசிகா என்பரை திருமணம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
சீதா தேவி வீற்றிருக்கும் அயோத்தி கனக் பவன் பற்றி தெரியுமா?
prem jacob marriage

மலையாள சீரியல்களில் நடிக்கும்போது இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வர ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com