ஃபைட் கிளப் பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Fight club Movie
Fight club Movie

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் ஃபைட் கிளப் படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உறியடி விஜய்குமார் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் ஃபைட் கிளப் திரைப்படம். அப்பாஸ் ஏ.ரஹ்மத் எழுதி, இயக்கிய ஃபைட் கிளப் படத்தை ஆதித்யாவின் ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனமும், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜிஸ்குவாட் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்துள்ளது.

இந்த திரைப்படம் கடந்த மாதம் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில், மோனிஷா, கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். வடசென்னை பின்புலத்தில் சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஃபைட் கிளப்பை இயக்குநர் எடுத்திருந்தார்.

இதன் கதை, திரைக்கதையை எழுத ஒரு வருடமும், படமாக்க ஒரு வருடமும், போஸ்ட் புரொடக்ஷன் முடித்து வெளியாக ஒரு வருடமும் என மூன்று வருடங்கள் பிடித்ததாக இயக்குநர் கூறியிருந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படம் வரும் 27-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com