
விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் என்றாலே ஒவ்வொரு டிவி சேனல்களும் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளையும், புதுப்புதுப்படங்களையும் ஒளிபரப்பு செய்வார்கள். ரீலிஸாகி சில நாட்களே ஆன படங்கள் கூட பண்டிகை தினங்களில் ஒளிபரப்புவார்கள். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை (ஆகஸ்ட் 27-ம்தேதி) கொண்டாடப்பட உள்ள நிலையில் ஒவ்வொரு டிவி சேனல்களிலும் ஒளிபரப்பாக உள்ள படங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
விஜய் டிவி :
* நாளை அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது. சுமார் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்த இந்த திரைப்படம் சின்னத்திரையில் வருவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
* சுந்தர் சி, வடிவேலு நடித்த ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சன் டிவி :
* நாளை சாலமன் பாப்பையா தலைமையில் இன்றைய குடும்பங்களில் பரிதாபத்திற்குரியவர் கணவனா, மனைவியா என்ற சிறப்பு பட்டிமன்றம் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
* காலை 11 மணிக்கு தனுஷ், நித்தியா மேனன் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
* பிற்பகல் 3 மணிக்கு சுந்தர் சி, சித்தார்த், திரிஷா நடித்த அரண்மணை 2 ஒளிபரப்பாகிறது.
கே டிவி :
நாளை காலை 7 மணிக்கு கார்த்தி நடித்த தேவ் திரைப்படமும், காலை 10 மணிக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த மீசைய முறுங்கு திரைப்படமும், பகல் 1 மணிக்கு சூர்யா நடித்த அயன் திரைப்படமும் மாலை 4 மணிக்கு விஷால் நடித்த ஆம்பள திரைப்படமும், இரவு 7 மணிக்கு தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
கலைஞர் டிவி :
* நாளை காலை 10 மணிக்கு பிரதீப் ரங்கநாதன் நடித்த Love Today திரைப்படமும் பிற்பகல் 1.30 மணிக்கு சித்தார்த் நடித்த மிஸ் யூ திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
ஜீ தமிழ் :
* நாளை மதியம் 12 மணிக்கு திரிஷா நடிப்பில் உருவான திரில்லர் திரைப்படமான ‘தி ரோட்’ ஒளிபரப்பாக உள்ளது.
* மாலை 5 மணிக்கு சந்தானம் நடித்த டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
ஜீ திரை :
* நாளை காலை 9.30 மணிக்கு அருண் விஜய் நடித்த யானை திரைப்படமும் பகல் 1 மணிக்கு சமுத்திரகனி நடித்த திரு.மாணிக்கம் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.
கலர்ஸ் டிவி :
* நாளை காலை 9 மணிக்கு சந்தானம் நடித்த சபாபதி திரைப்படமும் பிற்பகல் 2.30 மணிக்கு மம்முட்டி, நயன்தாரா நடித்த பாஸ்கர் தி ராஸ்கல் திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.